சிங்கப்பூர் நிறுவனங்கள் வெளியிட்ட தொடக்க பங்கு மதிப்பு 78% கூடியது

சிங்கப்பூர் நிறுவனங்கள் வெளியிட்ட தொடக்க பங்கு மதிப்பு 78% கூடியது

1 mins read

சிங்கப்பூர் நிறுவனங்கள் இந்த ஆண்டு முதல் ஆறு மாதத்தில் உள்நாட்டிலும் வெளிநாடுகளிலும் வெளியிட்ட தொடக்க பங்கு வெளியீடுகளின் மொத்த எண்ணிக்கை அதிகமாக இருந்தது. 12 வெளியீடுகளின் மூலம் US$459 மில்லியன் திரட்டப்பட்டது. ஆண்டு அடிப்படையில் பார்க்கையில் இது 78% அதிகமாகும். சென்ற ஆண்டு முதல் ஆறு மாதங்களில் தொடக்க பங்கு வெளியீடுகளின் மொத்த எண்ணிக்கை 10 ஆக இருந்தது. இருந்தாலும் சிங்கப்பூர் தொடக்க பங்கு வெளியீடுகளின் வருடாந்திர எண்ணிக்கை கடந்த 10 ஆண்டுகளாகவே இறங்குமுகமாகவே இருந்து வருகிறது என்று பாக்கர் மெக்கன்சி நிறுவன ஆய்வறிக்கை தெரிவிக்கிறது.

சிங்கப்பூர் பங்கு வெளியீட்டாளர்கள் இந்த ஆண்டு முதல் பாதியில் ஆசிய நாடுகளில் செயல்பட்ட இதர வெளியீட்டாளர்களைப் போல் அவ்வளவு சுறுசுறுப்பாக இருந்ததாகவும் தெரியவில்லை. சிங்கப்பூர் நிறுவனங்கள் தொடக்க பங்கு வெளியீடுகள் மூலம் உள்நாட்டில் திரட்டப்பட்ட மூலதனம் 64% கூடியது. அதேவேளையில், வெளியீடுகளின் மொத்த எண்ணிக்கை பாதியாகியது. மாறாக எல்லை கடந்த வெளியீடுகள் எண் ணிக்கை 300% அதிகரித்தது. மதிப்பு 166% கூடியது.