உட்லண்ட்ஸ் சோதனைச் சாவடியில் ஆயுதமேந்தி மிரட்டல்; ஆடவர் கைது

உட்லண்ட்ஸ் சோதனைச் சாவடியில் ஆயுதமேந்தி மிரட்டல்; ஆடவர் கைது

1 mins read
8b575316-195b-46f2-b4de-76f1501ec87e
-

உட்லண்ட்ஸ் சோதனைச் சாவடியில் மற்றொரு ஓட்டுநரை மிரட்டிய 51 வயது ஓட்டுநர் நேற்று முன்தினம் கைது செய்யப் பட்டார். மேலும் அவர், அந்த ஓட்டுநரின் வாகனப் பக்கவாட்டுக் கண்ணாடிகளையும் சேதப் படுத்தினார். சம்பவம் பற்றிய தகவல் அன்றைய தினம் பிற்பகல் 2.30 மணிக்குக் கிடைத்ததாக போலிசார் தெரிவித்தனர். ஆபத்தான ஆயுதத்தை வைத்திருந்ததற்காகவும் சாலையில் குழப்பத்தை விளைவித்ததற்காகவும் மற்றொரு வரின் உடைமைக்குச் சேதத்தை விளைவித்ததற்காகவும் அவர் கைதானார்.

அந்த ஆடவர், மற்றொருவர் சென்றுகொண்டிருந்த சாலைத் தடத்தில் அவருக்கு முன்பக்கம் திடீரென நுழைந்ததாக ஸ்ட்ரெய்ட்ஸ் டைம்ஸ் அறிந்தது. தனது வாகனத்தைவிட்டு வெளியேறிய ஆடவர், ஓட்டுநரது வாகனத்தின் பக்கக் கண்ணாடிகளைச் சேதப்படுத்தினார். துணியால் மறைக்கப்பட்ட ஆயுதத்தை அந்த ஆடவர் கையில் பிடித்துக்கொண்டு ஜோகூர் கடற்பாலத்தில் நின் றதைக் காட்டும் படங்கள் சில, ஃபேஸ்புக்கில் பதிவேற்றம் செய்யப்பட்டன. சம்பவம் குறித்த போலிசாரின் விசாரணை தொடர்கிறது.

ஃபேஸ்புக்கில் பதிவேற்றம் செய்யப்பட்ட படங்களில் ஆடவர் ஒருவர் துணியால் மறைக்கப்பட்ட ஆயுதத்தைக் கையில் ஏந்தி கடற்பாலத்தில் நிற்பதைக் காட்டின. படங்கள்: FACEBOOK/ SG ROAD VIGILANTE

மேலும் செய்திகளுக்கு