கேலாங் கொலை: சசிதரன் ராமசாமி மீது குற்றச்சாட்டு

1 mins read
011a8d27-c887-4328-95f8-02fbaa9e1cc2
-

கேலாங் வட்டாரத்தில் தனது சகா ஒருவரின் மரணத்துக்குக் காரண மாக இருந்தார் என்ற சந்தேகத்தின் பேரில் 30 வயது மலேசியரான சசி தரன் ராமசாமி கொலைக் குற் றத்தை எதிர்நோக்குகிறார். 29 வயது மலேசியரான நெல்சன் நாதன் செல்வராஜாவைக் கொலை செய்ததாக நேற்றுக் காலையில் அரசு நீதிமன்றத்தில் சசிதரனுக்கு எதிராகக் குற்றப் பத்திரிகை வாசிக்கப்பட்டது. இருவருக்கும் இடையே நேற்று முன்தினம் காலை 7.17க்கும் 8.18க்கும் நிகழ்ந்த கைகலப்பில் நெல்சன் கொல்லப்பட்டதாக நம்பப் படுகிறது.

நீதிமன்றத்துக்குக் கொண்டு வரப்பட்ட சசிதரன், நீலம், சாம்பல் நிற மேலாடை அணிந்திருந்தார். குற்றச்சாட்டு வாசிக்கப்பட்டபோது சசிதரனிடமிருந்து எவ்வித உணர் வும் தென்படவில்லை. அவ்விரு ஆடவர்களுக்கிடை யிலான உறவு பற்றி குற்றப்பத்தி ரிகையில் தெரிவிக்கப்படவில்லை என்றாலும் அவர்கள் இருவரும் நண்பர்கள் என்று நம்பப்படுகிறது. அவர்கள் தங்கிய விடுதியில் கைலகப்பு நிகழ்ந்ததாகவும் ‌ஷின் மின் நாளிதழ் தெரிவித்தது.

அரசு நீதிமன்றத்துக்கு நேற்றுக் காலை கொண்டு வரப்பட்ட சசிதரன் ராமசாமி (நடு) மீது கொலைக் குற்றம் சாட்டப்பட்டது. படம்: வான் பாவ்

மேலும் செய்திகளுக்கு