விமான நிலையத்தில் ஓட்டுநர் இல்லா வாகனம் பரிசோதனை

விமான நிலையத்தில் ஓட்டுநர் இல்லா வாகனம் பரிசோதனை

1 mins read
ae98b297-369b-4b4d-8cd5-ebebd47cae85
-

சாங்கி விமான நிலையத்தில் ஊழியர்கள் பற்றாக்குறையைச் சமாளிக்கும் முயற்சியாக ஓட்டு நர்கள் இல்லாத வாகனங்கள் பரிசோதிக்கப்படுகின்றன. விமான நிலையத்தில் ஊழியர் பற்றாக்குறை வருங்காலத்தில் அதிகரிக்கும் என்று தெரிகிறது. துறைமுகம், பொதுப் போக்கு வரத்து நிறுவனங்கள் உள்ளிட்ட பல்வேறு தொழில்துறைகளில் ஓட்டுநர்கள் இல்லாத வாகனங் களை அதிகமாக பயன்படுத்த திட்டங்கள் உள்ளன.

சாங்கி விமான நிலையத்தில் விரைவில் விமான நிலைய முனையங்களுக்கு இடையில் பயணிகளை இத்தகைய வாக னங்கள் கொண்டு சென்று, அல்லது கொண்டு வரும் வாய்ப்பு உள்ளது. அதோடு, சரக்குகளை யும் பெட்டிகளையும் விமானத்துக் குக் கொண்டுசெல்லவும் விமா னங்களிலிருந்து கொண்டுவரவும் விரைவில் இத்தகைய வாகனங் கள் பயன்படக்கூடும். சாங்கி விமானநிலையக் குழு மம், 'சாட்ஸ்' எனப்படும் தனது தரைதள தளவாடப் போக்கு வரத்து நிறுவனம் உள்ளிட்ட பல பங்காளி நிறுவனங்களுடன் சேர்ந்து ஏற்கெனவே தானியங்கி வாகனங்களைப் பரிசோதித்து வருகிறது.

ஓட்டுநர் இல்லாத இத்தகைய வாகனம், விமானத்திலிருந்து சரக்குக் கொள்கலனை இழுத்துக்கொண்டுவரும். விமானத்துக்குக் கொண்டு செல்லும். படம்: ஸ்ட்ரெய்ட்ஸ் டைம்ஸ்

மேலும் செய்திகள்