விடுமுறை முடிந்து சிங்கப்பூருக்கு திரும்பியபோது விபத்து: தம்பதியர் மரணம்

விடுமுறை முடிந்து சிங்கப்பூருக்கு திரும்பியபோது விபத்து: தம்பதியர் மரணம்

1 mins read
53d898c8-0a91-4a20-a46d-615e7d0fc883
-

இரண்டு பிள்ளைகளுடன் மலேசியா சென்றிருந்த தம்பதியர் வெள்ளிக்கிழமை காரில் சிங்கப் பூருக்கு திரும்பிக்கொண்டிருந்த போது ஜோகூரில் தங்காக் அருகே கார் விபத்துக்குள்ளாகிவிட்டது. அந்தச் சம்பவத்தில் தம்பதியர் இருவரும் மாண்டுவிட்டனர். சுவா கே லியோங் என்ற 41 வயது சிங்கப்பூர் நிரந்தரவாசி காரை ஓட்டிச் சென்றார்.

வாகனம் கட்டுப்பாட்டை இழந்துவிட்டதால் அவரது கார் வேறு ஒரு வாகனத்தின் மீது மோதிவிட்டது. இந்தச் சம்பவம் தங்காக் அருகே அன்று பிற்பகல் சுமார் 2.15 மணிக்கு நிகழ்ந்தது. விபத்தில் கடுமையான காயம் அடைந்த திரு சுவா அதே இடத் தில் மரணமடைந்துவிட்டதாக மலேசிய ஊடகங்கள் தெரிவித் தன. அவருடைய 43 வயது மனைவி கடுமையாகக் காயம் அடைந்தார். தங்காக் மருத்துவமனைக்குக் கொண்டுசெல்லப்பட்ட அவர் அங்கு பின்னர் மரணமடைந்த தாக சின் சியூ டெய்லி நியூஸ் என்ற மலேசிய செய்தித்தாள் செய்தி வெளியிட்டது.

ஜோகூரில் தங்காக் அருகே ஜூன் 15ஆம் தேதி ஒரு வாகனத்துடன் மோதி விபத்துக்குள்ளானதை அடுத்து காரில் பயணம் செய்த சிங்கப்பூர் நிரந்தரவாசி ஒருவரும் அவருடைய மனைவியும் மரணம் அடைந்துவிட்டார்கள். கார் இந்தக் கதியானது. படம்: சின் சியூ ஜிப் போ/ஆசியா நியூஸ் நெட்வொர்க்

மேலும் செய்திகள்