சாலை நடுவில் மான்; விபத்தில் டாக்சி ஓட்டுநர் காயம்

1 mins read
53c5c214-bd24-44f6-9a6b-6dc115e9baeb
-

சிங்கப்பூரின் பரபரப்பான புக்கிட் தீமா விரைவுச் சாலையின் நடுவில் நேற்று காட்டு மான் ஒன்று அமர்ந் திருப்பதைக் கண்டு வாகன மோட்டிகள் பலர் அதிர்ச்சியடைந் தனர். அதன் மீது மோதுவதைத் தவிர்க்க வாகனமோட்டிகள் முயற்சி செய்ததால் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டது. ஒரு கட்டத் தில் மோட்டார் சைக்கிள் ஓட்டி ஒருவர், காட்டு மான் மீது மோது வதைத் தவிர்க்க பெரும் முயற்சி யில் ஈடுபட்டார். இதன் காரணமாக அவரது அருகே வந்து கொண்டிருந்த இரு வாகனங்களும் அவசரமாக நிறுத்தப்பட்டன.

இதில் மூன்று வாகனங்களும் மோதியதில் டாக்சி ஓட்டுநர் ஒருவர் காயம் அடைந்தார். மண்டாய் ரோட்டுக்கு அருகே உள்ள விரைவுச்சாலையில் நிகழ்ந்த விபத்து குறித்து காலை 4.40 மணிக்கு தகவல் வந்ததாக காவல்துறையினர் கூறினர். அங்கு சென்ற அவர்கள் சுய நினைவுடன் இருந்த டாக்சி ஓட்டு நரை மீட்டு இங் டெங் ஃபோங் மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். அதிகாலையில் வழி தவறி சாலை நடுவில் சிக்கிக் கொண்ட மான் மீது வாகனங்கள் மோதியதால் காயம் அடைந்திருக் கலாம் என்று நம்பப்படுகிறது. சமூக ஊடகங்களில் பரவிய காணொளிகளில் அந்த 'சாம்பா' வகை மான் காலூன்ற முடியாமல் தவிப்பதைக் காண முடிந்தது.

அடிபட்டு கிடந்த மானுக்கு சிங்கப்பூர் வனவிலங்கு காப்பகத்தின் அதிகாரிகள் உதவி செய்கின்றனர். படம்: ஏக்கெர்ஸ்

மேலும் செய்திகள்