சிறைத் தண்டனை முடிந்து மீண்டும் குற்றம் புரிந்ததற்காக டாங் ஹியன் லெங் மீண்டும் சிறைத் தண்டனை பெற்றார். கொள்ளையடித்த குற்றத் திற்காக 12 பிரம்படியுடன் 12 ஆண்டுகள் சிறையில் வைக்கப் பட்ட 47 வயது டாங் தனது தண்டனை காலம் முடிந்ததும் மறுபடியும் குற்றச்செயலில் ஈடு பட்டார். நம்பிக்கை மோசடி, முரட்டுத்தனமாக ஒருவரைத் தாக்கியது, ஓர் அரசாங்க ஊழியரைத் திட்டியது, காவல் அதிகாரியாக நடித்துப் பாலியல் தொழில் புரியும் ஒரு மாதை ஏமாற்றியது ஆகிய குற்றங்களை விசாரணையில் அவர் ஒப்புக் கொண்டார். இதையடுத்து அவருக்கு மீண்டும் ஏழு ஆண்டுகள் சிறைத் தண்டனை விதிக்கப்பட்டது. பாலியல் தொழில் புரியும் 25 வயது சீன நாட்டைச் சேர்ந்த மாதின் சேவையை நாடிய டாங், தான் ஒரு காவல் அதிகாரி என்று கூறி ஏமாற்றினார். பதினைந்து வயதிலேயே திருடிய குற்றத்திற்கு சட்டத்தை மீறிய அவர், பலாத் காரம், அச்சுறுத்தல் போன்ற குற்றங்களுக்காக பலமுறை சிறை சென்றுள்ளார்.
காவல் அதிகாரியாக நடித்தவருக்கு மீண்டும் சிறை
1 mins read

