ஓங் யி காங்: 2025க்குள் காசோலையைக் கைவிட இலக்கு

ஓங் யி காங்: 2025க்குள் காசோலையைக் கைவிட இலக்கு

1 mins read

சிங்கப்பூர் எதிர்வரும் 2025ஆம் ஆண்டிற்குள் காசோலை பயன் படுத்தும் நடைமுறையைக் கைவிட இலக்கு நிர்ணயிக்க வேண்டும் என்று கல்வி அமைச்சர் ஓங் யி காங் கூறியுள்ளார். இதன் மூலம் வர்த்தக உரிமை யாளர்களும் அர சாங்கமும் வங்கிக் கணக்கு எண் போன்ற விவரங்களை வெளி யிடாமல் கட்டணங்களை உடனுக் குடன் பெற முடியும். 'PayNow' எனப்படும் மின்னி லக்கம் வழி பணம் மாற்றும் சேவை யை விரிவுபடுத்தி வர்த்த கங்களையும் இதில் உள்ளடக்குவ தன் மூலம் காசோலைகளைப் பயன்படுத்தாத நிலை உருவாக லாம் என்றார் சிங்கப்பூர் நாணய ஆணையத்தின் இயக்குநர் சபை உறுப்பினருமான திரு ஓங். சிங்கப்பூர் வங்கிகள் சங்கத் தின் வருடாந்திர விருந்து நிகழ்ச்சியில் நேற்று முன்தினம் அவர் உரையில் இதனைத் தெரிவித்தார். "நாம் முழுமையான ரொக்க மற்ற சமுதாயமாக வேண்டும் என்ற நடைமுறையைத் திணிப்பது நோக்கமல்ல. ரொக்கத்தைக் கை யாள்வது சிலருக்குப் பயனுள்ளதா க அமையலாம்.

மேலும் செய்திகள்