மலேசியாவின் ஜோகூர் பாருவில் உள்ள சிட்டி ஸ்குவேர் கடைத்தொகுதியில் சிங்கப்பூரின் துணைத் தூதரகம் புதிதாகத் திறக்கப்பட்டுள்ளது என 'வாட்ஸ்அப்' மூலம் பரவிக் கொண்டிருக்கும் செய்திக்கு சிங்கப்பூர் வெளியுறவு அமைச்சு விளக்கம் தந்துள்ளது. இந்த தகவலைத் தங்கள் அமைச்சின் அதிகாரிகள் யாரும் அனுப்பவில்லை என்றும் ஜோகூர் பாருவின் சிட்டி ஸ்குவேர் கடைத்தொகுதியில் சிங்கப்பூரின் துணைத் தூதரகம் கடந்த 2009ஆம் ஆண்டு முதல் செயல்பட்டு வருகிறது என்றும் தமிழ் முரசிடம் அமைச்சு தெரிவித்தது.
ஜோகூரில் சிங்கப்பூரின் துணைத் தூதரகம்: அமைச்சு விளக்கம்
1 mins read

