குடும்பங்களிடையே பிணைப்பை வலுப்படுத்தும் 'பேஷன்ஆர்ட்ஸ்' விழா

குடும்பங்களிடையே பிணைப்பை வலுப்படுத்தும் 'பேஷன்ஆர்ட்ஸ்' விழா

1 mins read
50b95c98-ce92-4aea-b59a-be3a30966713
-

தீவு முழுவதும் திறந்தவெளியிலும் குடியிருப்புப் பேட்டைகளிலும் சுமார் 1,000 விலங்கு வடிவிலான பலகைகள் இம்மாதம் 30ஆம் தேதியிலிருந்து அமைக்கப்படும். ஒட்டகச்சிவிங்கி, நீர்நாய், சிங்கம் வடிவிலான இந்தப் பலகைகளுக்கு ஏறக்குறைய 5,000 இளம் குடும்பங்கள் சாயம் பூசுவர்.

இவ்வாண்டின் 'பேஷன்ஆர்ட்ஸ் ஃபெஸ்டிவல் 2018' எனப்படும் திருவிழாவின் ஒரு பகுதியாக இந்தக் கலை நடவடிக்கைகளுக்கு ஏற்பாடு செய்யப்பட்டுள்ளன. ஏழா வது ஆண்டாக இடம்பெறும் இந்தத் திருவிழா, ஆகஸ்ட் 25ஆம் தேதி வரை நடைபெறும். 12 வயதுக்கு உட்பட்ட சிறுவர் களைக் கொண்டுள்ள இளம் குடும்பங்களின் பிணைப்பைக் கலைகள் மூலம் வலுப்படுத்துவது இந்தத் திருவிழாவின் தலையாய நோக்கம்.

வெவ்வேறு தொகுதிகளில் தோன்றவுள்ள 52 'திருவிழா கிராமங்களுக்கு' 250,000 குடி யிருப்பாளர்களை ஈர்க்க முனைகி றது மக்கள் கழகம். இளம் குடும்பங்களை ஈடுபடுத் துவதில் கலை ஒரு அர்த்தமுள்ள வழி என்றார் மக்கள் கழகத்தின் சமூகக் கலைகள் மற்றும் கலாசாரப் பிரிவின் இயக்குநரான பேட்ரிக் சிம்.

மேலும் செய்திகள்