சிங்கப்பூர் மிகப் பாதுகாப்பான நாடு

சிங்கப்பூர் மிகப் பாதுகாப்பான நாடு

1 mins read
1e4cb14f-851c-4f59-bf3a-acf478150309
-

மூன்றாவது ஆண்டாக சிங்கப்பூர் உலகிலேயே மிகப் பாதுகாப்பான நாடாகத் தேர்ந்தெடுக்கப்பட்டு உள்ளது. 'கேலப்' நிறுவனம் மிக அண்மையில் வெளியிட்ட சட்டம் மற்றும் ஒழுங்கு அறிக்கைபடி இது தெரிய வந்துள்ளது. கடந்த ஓராண்டில் தங்கள் நாட்டின் காவல்துறை, தனிநபர் பாதுகாப்பு, திருட்டு, தாக்குதல், வழிமறித்துக் கொள்ளையடித்தல் சம்பவங்கள் ஆகியவற்றின் அடிப் படையில் 142 நாடுகளைச் சேர்ந்த குடியிருப்பாளர்கள் வாக்களித் தனர். அவ்வகையில் 2016ல் நூற் றுக்கு 93 புள்ளிகள் பெற்ற சிங்கப்பூர், கடந்த ஆண்டும் இந்த ஆண்டும் 97 புள்ளிகள் பெற்று பட்டியலில் முதல் இடத்தைப் பெற் றுள்ளது.

இரண்டாவது இடத்தில் நார்வே, ஐஸ்லாந்து, ஃபின்லாந்து ஆகிய மூன்று நாடுகளும் பகிர்ந்து கொண்டன. அவை மூன்று தலா 93 புள்ளிகள் பெற்றன. பட்டியலின் முதல் பத்து இடங்களில் இடம்பெற்றுள்ள மற்ற இரண்டு ஆசிய நாடுகள் 91 புள்ளிகள் பெற்ற ஹாங்காங் மற் றும் 89 புள்ளிகள் பெற்ற இந்தோ னீசியா ஆகும். ஆகக் குறைவான பாதுகாப்புடைய நாடாக 44 புள்ளிகள் பெற்ற வென்சுவேலா பட்டியலின் இறுதியில் இடம் பெற்றுள்ளது.

மேலும் செய்திகள்