உடல்நலத்துக்கு உதவ உதயம் சிங்கப்பூரில் நிறைய இந்தியர்கள் உடல் நலனுக்கு உகந்த வாழ்க்கை பாணியைக் கடைபிடிப்பதில்லை என்பதை உணர்ந்த திரு விஜையன் ஹரிதாஸ், 39, 'தாறு மாறு ரன்னர்ஸ்' என்ற ஓட்டக் குழுவை 15 உறுப்பினர்களுடன் தொடங்கினார். இப்போது 85 பேர் அதில் உறுப்பினர்கள். "சிங்கப்பூரில் வேலை பார்ப் போரில் சுமார் மூன்றில் இரண்டு பேர் அலுவலகங்களில் பணி புரி கிறார்கள். அவர்களது வாழ்க்கை முறை ஆரோக்கியமற்றதாக, சோம் பலைத் தூண்டும் விதமாக இருக் கிறது. சமுதாய ஊக்குவிப்பால் ஆரோக்கிய நடைமுறையை மக்கள் பின்பற்றுவார்கள் என்ற நம்பிக்கையில் புத்துணர்ச்சியைத் தரும் பெயருடன் இந்தக் குழு அமைக்கப்பட்டது," என்று திரு விஜையன் விளக்கினார். வார இறுதி நாட்களில் ஓட்ட பயிற்சிகள் வெவ்வேறு இடங் களில் நடத்தப்படும். பெரும்பாலும் சனிக்கிழமை காலையில் இக் குழுவைச் சேர்ந்தவர்கள் சுமார் 30 பேர் கூடி ஓடுவார்கள்.
'தாறு மாறு ரன்னர்ஸ் குழு'
1 mins read

