டாக்சி மோதியதில் மூவர் காயம்

டாக்சி மோதியதில் மூவர் காயம்

1 mins read
a617bc15-e2af-494b-b7b0-f1cb559c4c29
-

'கம்ஃப்ர்ட்டெல்குரோ' டாக்சியும் பாதசாரி ஒருவரும் சம்பந்தப் பட்ட விபத்து ஒன்று நேற்று முன்தினம் இரவு 10.10 மணிக்கு நிகழ்ந்தது பற்றி போலிசாருக்குத் தகவல் கிடைத்தது. கேலாங் லோரோங் 23ல் நிகழ்ந்த இந்த விபத்தில் காயமுற்ற மூன்று ஆடவர்கள் டான் டோக் செங் மருத்துவமனைக்குக் கொண்டு செல்லப்பட்டபோது சுயநினைவுடன் இருந்ததாக போலிஸ் பேச்சாளர் தெரிவித்தார். அவர்கள் 41 வயதுக்கும் 66 வயதுக்கும் இடைப்பட்டவர்கள். ஓட்டுநர் ஒரு நடைபாதை மேல் வாகனத்தை ஏற்றிப் பின்னர் ஒரு தூணை இடித்ததாக நம்பப்படுகிறது. ஃபேஸ்புக்கில் வலம்வரும் காணொளி ஒன்றில் விபத்தி னால் பெரிதும் சேதமடைந்த தூணின் அடிப்பகுதி காட்டப் படுகிறது. அதோடு வாகன முன்பகுதியின் மேல்மூடியில் ஒரு பெரிய குழியும் ஏற்பட்டுள்ளது. விபத்து குறித்த போலிஸ் விசாரணை தொடர்கிறது.