பதாகை தவறாக வைக்கப்பட்ட விவகாரத்தில் அடித்தளத் தலைவர் மன்னிப்பு கேட்டார்

பதாகை தவறாக வைக்கப்பட்ட விவகாரத்தில் அடித்தளத் தலைவர் மன்னிப்பு கேட்டார்

2 mins read
193db216-088f-42b8-ab69-3ee9d5c9da41
-

அல்ஜுனிட் குழுத் தொகுதிக் கான மக்கள் செயல் கட்சியின் முன்னாள் தேர்தல் வேட்பாளர் ஒருவர் பாட்டாளிக் கட்சியின் பதாகையை மறைத்ததற்கு மன்னிப்பு கேட்டுக் கொண்டுள்ளார். மக்கள் செயல் கட்சியின் பிடோக் ரெசவோர்-பொங்கோல் அடித்தளப் பிரிவின் தற்போதைய தலைவரும் துடிப்பான அடித்தளத் தலைவராகவும் விளங்கும் திரு விக்டர் லாய் நேர்ந்த தவற்றைச் சரி செய்யும்படி தமது கட்சி தொண்டர்களைக் கேட்டுக் கொண்டுள்ளதாக நேற்று முன் தினம் தமது ஃபேஸ்புக் பக்கத்தில் தெரிவித்தி ருந்தார். மக்கள் கழகத்தின் பிடோக் ரெசவோர்-பொங்கோல் அடித்தளப் பிரிவு ஏற்பாடு செய்தி ருந்த நோன்புப் பெருநாள் தொடர்பான நடவடிக்கையைக் காட்டும் திரு விக்டர் லாய்யின் விளம்பரப் பதாகை ஏற்கெனவே இருந்த பாட்டாளிக் கட்சியின் பதாகையை மறைக்கும் விதத்தில் போடப்பட்டிருந்தது.

இதைக் காட்டும் புகைப்படம் ஒன்றைத் தனது ஃபேஸ்புக்கில் பகிர்ந்துகொண்ட குமாரி ஓங் யு ஷான், அந்தப் பதாகை பாட்டாளிக் கட்சியின் தொகுதியான அல் ஜுனிட் குழுத்தொகுதி வட்டாரத் தில் காணப்பட்டதாகத் தெரிவித் தார். இந்த இரு பதாகைகளுக்குக் கீழ் மேலும் ஒரு பதாகை இருந்தது. அது என்னவென்று தெரியவில்லை. குமாரி ஓங்கின் ஃபேஸ்புக் பதிவுக்குப் பதிலளித்த திரு லாய், சம்பவம் நடந்ததை உறுதி செய்த துடன் அது நடந்ததற்கு மன்னிப் பும் கேட்டுக் கொண்டார். "எங்கள் பதாகை பாட்டாளிக் கட்சியின் பதாகைக்கு மேல் வைக்கப்பட்டிருக்கக்கூடாது. நான் அதைப் பார்த்து, எங்கள் தொண் டர்களிடம் தவற்றைச் சரி செய்ய சொல்லியிருக்கிறேன். தவற்றுக்கு மன்னிப்பும் கேட்டுக் கொள்கிறேன். தவற்றைச் சுட்டிக்காட்டியதற்கு நன்றி," என்று தனது ஃபேஸ்புக் பதிவில் குறிப்பிட்டிருந்தார்.

பாட்டாளிக் கட்சியின் பதாகைக்கு மேல் திரு விக்டர் லாயின் பதாகை போடப்பட்டிருந்தது சர்ச்சையைக் கிளப்பியது. படம்: ஃபேஸ்புக்/விக்டர் லாய்