குடிநுழைவு முகப்புகளில் கண்காணிப்புக் கருவிகளைப் பொருத்த ஜோகூர் ஏற்பாடு

குடிநுழைவு முகப்புகளில் கண்காணிப்புக் கருவிகளைப் பொருத்த ஜோகூர் ஏற்பாடு

1 mins read

ஜோகூர் பாரு சுங்க, குடிநுழைவு கட்டட வளாகத்திலுள்ள எல்லா குடிநுழைவு முகப்புகளிலும் கண்காணிப்புக் கருவிகளைப் பொருத்த ஜோகூர் மாநில அர சாங்கம் ஏற்பாடு செய்து வரு கிறது. குடிநுழைவு அதிகாரிகளி டையே ஒழுக்கம் தொடர்பான புகார்கள் அதிகரித்து வரு வதைத் தொடர்ந்து இது குறித்து அரசாங்கம் கவனம் செலுத்தி வருகிறது. குடிநுழைவு அலுவலகத்திற்கு அதிகாரிகள் தாமதமாக வருவது, வேலை நேரத்தின்போது கைபேசியில் மூழ்கி இருப்பது போன்ற ஒழுங்கீனச் செயல்கள் குறித்து கவனிக்க சிறப்புக் குழு ஒன்று அமைக்கப்படும் என்று இவ்வாரத் தொடக்கத்தில் ஜோகூர் பொதுப்பணி, உள்கட்ட மைப்பு மற்றும் போக்குவரத்துக் குழு தலைவர் மஸ்லான் புஜாங் தெரிவித்து இருந்தார். அதிகாரிகளின் மெத்தனம் காரணமாக உட்லண்ட்ஸ் நீரி ணையில் உள்ள சில குடிநுழைவு முகப்புகள் தாமதமாகத் திறக்கப் படுவதாகவும் புகார்கள் தெரி விக்கப்பட்டு வந்தன.