எஸ்.வெங்கடேஷ்வரன்
மக்கள் கழகமும் நற்பணிப் பேர வையும் ஏற்பாடு செய்த நற்பணி சமூக கேளிக்கை விழா நேற்று காலை 10 முதல் மாலை 5 மணி வரை பாசிர் ரிஸ் வட்டாரத்தில் அமைந்திருக்கும் 'டௌன்டவுன் ஈஸ்ட்' கேளிக்கை மையத்தில் நடைபெற்றது. சிறப்பு விருந்தினராக போக்கு வரத்து, தொடர்பு, தகவல் மூத்த துணை அமைச்சர் டாக்டர் ஜனில் புதுச்சேரி வருகை புரிந்தார். சிங்கப்பூரின் இருநூறாம் ஆண்டு விழாவை முன்னிட்டு நடத்தப்படும் நற்பணிப் பேரவை இந்திய மரபுடைமை மற்றும் கலாசார போட்டியை அமைச்சர் ஜனில் துவக்கி வைத்தார். "துணைப் பிரதமர் தர்மன் சண்முகரத்னம் இந்தியர் நற்பணிச் செயற்குழுக்களின் 40ஆம் ஆண்டு நிறைவு விழாவில் கூறியதுபோல் நம் இந்திய சமுதாயம் மரபுடை மையை மறக்காமல் இருக்கவும் கடந்த காலப் பாடங்களைக் கற்று நம் கலாசாரத்திற்கு உயிரூட்டவும் பாடுபட வேண்டும்.
விழா மேடையில் (இடமிருந்து) தமிழ் முரசு இணை ஆசிரியர் வீ.பழனிச்சாமி, மக்கள் கழக துணைத் தலைமை நிர்வாக இயகுநர் லிம் ஹாக் யு, போக்குவரத்து, தொடர்பு தகவல் மூத்த துணை அமைச்சர் ஜனில் புதுச்சேரி, மக்கள் கழக நற்பணிப் பேரவைத் தலைவர் கே.ராமமூர்த்தி, நற்பணி சமூகக் கேளிக்கை விழா ஏற்பாட்டுக் குழுத் தலைவர் ஸ்ரீநிவாசன் ஸ்ரீநாத். படம்: ஸ்ட்ரெய்ட்ஸ் டைம்ஸ்

