மாணவி நந்தினி மீண்டும் கைது

1 mins read

மதுரை: சட்டக்கல்லூரி மாணவி நந்தினியும் அவரது தந்தையும் மதுரையில் மீண்டும் கைது செய்யப்பட்டுள்ளனர். வாக்குச்சீட்டு முறையில் தேர்தல் நடத்தவேண்டும் என்று வலியுறுத்தி பிரதமர் வீட்டின் முன்பு போராட்டம் நடத்த இருப்பதாக நந்தினி அறிவித்திருந்தார். மேலும், தமிழகத்தில் முழு மதுவிலக்கை அமல்படுத்த வேண்டும் என்பதும் இவரது கோரிக்கை ஆகும். டெல்லியில் போராட்டம் நடத்த திட்டமிட்டிருந்த அவரை நேற்று முன்தினம் இரவு மதுரை ரயில் நிலையத்தில் வைத்துப் போலிசார் கைது செய்தனர்.

மேலும்