அல்மிரட்டி ஸ்திரீட்டில் உள்ள கட்டடத்தில் நேற்று மாலை 4.10 மணிக்கு நிகழ்ந்த பணிமனை விபத்தில் உணவு நிறுவனத்தின் 58 வயது பெண் ஊழியர் ஒருவர் உயிரிழந்தார். 'தைம் ஃபூட் அண்ட் சர்வீசஸ்' நிறுவனத்தின் அந்த ஊழியர் அந்நிறுவனத்தின் கணக்குகளைப் பார்த்து வந்தார் மிகவும் பொறுப்பானவரான அவர் தமது பணியையும் தாண்டி மற்றவர்களுக்கு உதவும் குணம் பெற்றவர் என்று அந்நிறுவனத்தின் இயக்குநர் திரு லாரன்ஸ் ஹீ கூறினார். அந்தக் கட்டடத்தின் மின்தூக்கிக்கும் மின்தூக்கித் தளத்துக்கும் இடையே அம்மாது மாட்டிக்கொண்டார் என்றும் அதில் அவரது தலை நசுங்கியது என்றும் அறியப் படுகிறது. பின்னர் அவர் துண்டான உடல் மின்தூக்கிப் பகுதியிலிருந்து அகற்றப்பட்டது என்று பக்கத்து நிறுவனத்தின் ஊழியர் ஸ்ட்ரெய்ட்ஸ் டைம்சிடம் கூறினார்.
உணவு நிறுவனத்தின் 58 வயது ஊழியர் பணிமனை விபத்தில் மரணம்
1 mins read

