எஸ். வெங்கடேஷ்வரன்
உயர்கல்வி பயிலும் மாணவர் களுக்கு கடந்த ஞாயிற்றுகிழமை மொத்தம் $237,000 நிதி வழங் கியது சிவதாஸ்-இந்து அறக்கட் டளை வாரியத்தின் கல்வி உதவி நிதி. 2011லிருந்து வழங்கப்பட்டு வரும் இந்த நிதி, இதுவரை கிட்டத்திட்ட 1,460 மாணவர் களுக்கு சுமார் $2.67 மில்லியன் ரொக்கத்தை வழங்கியுள்ளது. ஒவ்வோர் ஆண்டும் இரு தவ ணைகளில் இந்த உதவி நிதி வழங்கப்படுகிறது. சிராங்கூன் சாலையில் அமைந்துள்ள பிஜிபி அரங்கத்தில் இவ்வாண்டிற்கான முதல் கல்வி உதவி நிதி வழங்கும் நிகழ்ச்சி நடைபெற்றது. இவ்விழாவில் சிறப்பு விருந் தினராக வர்த்தக தொழில்; கல்வி மூத்த துணை அமைச்சர் சீ ஹொங் டாட் பங்கேற்று கல்வி விருதுகளை வழங்கினார். "கல்வியின் ஒவ்வொரு நிலை யிலும் மாணவர்கள் பல முடிவுகள் எடுக்கவேண்டும். எந்தத் துறை யில் படிப்பது, எந்தத் திறன்களைக் கற்பது, எந்த பட்டமோ பட்டயமோ பெறுவது போன்றவற்றைத் தேர்ந் தெடுக்க வேண்டும்.
"விருது பெற்ற மாணவர்கள் அவர்களின் பலன்களையும் திறன் களையும் பற்றி யோசிக்க நிறைய நேரமும் முயற்சியும் எடுக்க வேண்டும். எதிர்காலத்தில் பொரு ளாதாரத்தில் உருவாகும் புது வேலைகளையும் வாய்ப்புகளையும் பெற இது உதவும்," என்றார் சிவதாஸ்-இந்து அறக்கட்டளை வாரியத்தின் கல்வி நிதியின் தலைவரும் இந்து ஆலோசனை மன்றத்தின் துணைத் தலைவரு மான திரு என்.புருஷோத்தமன். நான்கு பிரிவுகளிலிருந்து மொத்தம் 166 மாணவர்கள் இந்த நிதியால் பயன் அடைவார்கள்.
55 பேர் தொழில்நுட்பக் கல்விக் கழகங்களையும் 83 பேர் பலதுறைத் தொழில் கல்லூரிகளையும் சேர்ந்த வர்கள். மேலும் 14 பேர் உள்ளூர் பல்கலைக்கழகங்களையும் 14 பேர் தனியார் கல்வி நிலையங்களையும் சேர்ந்த மாணவர்கள். $1,600 நிதி தொகையைப் பெற் றவர்களில், மெர்டோக் பல்கலைக் கழகத்தில் பகுதி நேரமாக பயிலும் 26 வயது குமாரி மீனாக்ஷி அஷ்லியும் ஒருவர். "இந்த உதவி நிதியைப் பெற நன்றி கடன்படு கிறேன். எனக்கு இருக்கும் கட் டண பாரம் சற்று குறையும். நிதி சார்ந்த கவலைகள் நீங்கி படிப்பில் முழு கவனத்தைச் செலுத்த இது உதவும்," என்றார் குமாரி மீனாக்ஷி. சிங்கப்பூர் சமூக ஆறிவியல் பல்கலைக்கழகத்தில், ஆலோ சனைத் துறையில் முதலாம் ஆண்டு படிக்கும் மாணவி கா. சுகன்யா, 25, வசதி குறைந்த மாணவர்கள் கல்வியில் மேல்நிலை அடைய இதுபோன்ற உதவி நிதி கள் முக்கியம் என்று சொன்னார்.
சிவதாஸ் - இந்து அறக்கட்டளை வாரிய நிதியைப் பெற்ற மாணவர் களுடன் வர்த்தக தொழில்; கல்வி மூத்த துணை அமைச்சர் சீ ஹொங் டாட் கலந்துரையாடுகிறார். படம்: த.கவி

