'நெட்ஸ்' முனையங்களை ஒரே நாளில் பெற்றுக்கொள்ள புதிய ஏற்பாடு

'நெட்ஸ்' முனையங்களை ஒரே நாளில் பெற்றுக்கொள்ள புதிய ஏற்பாடு

1 mins read
a3aaafea-e5fd-4699-b42d-a01c3ce096fb
-

சிங்கப்பூரை ரொக்கமற்ற சமுதாயமாக உருவாக்கும் முயற்சி சூடுபிடித்துள்ளது. 'நெட்ஸ்' கட்டண முறையைப் ஏற்றுக்கொள் ளும் முனையங்களைப் பெறுவதற்கு வசதி ஏற்படுத்தித் தரப்பட்டுள்ளது. வணிகங்கள் இணையத்தில் அதற்கான விண்ணப்பங் களைச் சமர்ப்பித்த ஒரு நாளிலேயே அவை நெட்ஸ் முனையங்களைப் பெற்றுக்கொள்ளலாம். இதனால் வணிகங்கள் இனி விண்ணப்பப் படிவங்களைச் சமர்ப்பிக்க தேவையிராது. ஏற்கெனவே நடப்பில் இருந்த விண்ணப்ப செயல்முறையைப் பரிசீலிக்க இரு வாரங்கள் வரை எடுக்கக்கூடும்.

வணிகங்கள் நெட்ஸ் கட்டண முறையைக் கடைப்பிடிக்க அவற்றுக்கு வசதியை ஏற்படுத்தித் தரவே தனது மின் னிலக்க உருமாற்றுத் திட்டத்தின் ஒரு பகுதியாக இந்தப் புதிய ஏற்பாடு செய்யப்பட்டுள்ளதாக நெட்ஸ் நிறுவனம் தெரிவித்தது. மேலும், மனிதவளத்தையும் விண்ணப்பத்தில் கணக்கு விவரங்களைப் பதிவுசெய்யும்போது ஏற்படும் பிழைகளையும் குறைக்க முடியும் என அது கூறியது.

மேலும் செய்திகள்