பொய்யான செய்திகளை ஒடுக்கு வதற்கான வழிமுறையை ஆராய்ந்து வரும் நாடாளுமன்றக் குழு ஒன்று, செய்தியாளர்கள் எந்தவொரு தடையும் இல்லாமல் செய்தி எழுதுவதற்கு வழி வகுப் பதிலும் பொய்த் தகவல்களைப் பரப்புவோருக்கு எதிராக சட்ட நட வடிக்கைகளை அமல்படுத்துவ திலும் சமநிலையைக் காண விரும்புகிறது. இணையத்தில் வேண்டு ம் என்றே பொய்யான செய்திகளைப் பரப்பு வோருக்கு எதிராக அமைக் கப்பட்ட தெரிவு குழு, ஏற்கெனவே முன் வைக்கப்பட்ட பரிந்துரைகளை இன்னும் பரி சீலித்து வருவதாக போக்குவரத்து, தொடர்பு, தகவல் மூத்த துணை அமைச்சர் ஜனில் புதுச்சேரி தெரிவித்துள்ளார். இவ்வாண்டு மார்ச் மாதத்தில் அக்குழு எட்டு நாட்களுக்கு பொது விசாரணை மேற்கொண் டது.
இதன் தொடர்பில் இறுதியாக வெளியிடப்படும் அறிக்கையில், இதில் சம்பந்தப்பட்ட அனைத்து பொய்ச் செய்திகளுக்கு எதிரான சட்டங்கள் குறித்து அமைச்சர் ஜனில் புதுச்சேரி பங்குதாரர்களின் கருத்துகளும் அக்கறைகளும் கவனிக்கப்படு வதை உறுதிசெய்யவே அக்குழு பரிந்துரைகளை இன்னும் பரிசீ லித்து வருவதாக திரு ஜனில் விவரித்தார்.
போக்குவரத்து, தொடர்பு, தகவல் மூத்த துணை அமைச்சர் ஜனில் புதுச்சேரி. படம்: ஸ்ட்ரெய்ட்ஸ் டைம்ஸ்

