ஜூலை முதல் வீட்டு காப்புறுதிக்கு குறைந்த சந்தா

ஜூலை முதல் வீட்டு காப்புறுதிக்கு குறைந்த சந்தா

1 mins read
5e9ce113-1350-4a80-8b81-2c9bff3b4bf3
-

இவ்வாண்டு ஜூலை முதல் அரை மில்லியனுக்கும் அதிகமான மத்திய சேம நிதி உறுப்பினர்கள் தங்களது வீட்டுக் காப்புறுதித் திட்டத்திற்கு குறைந்த சந்தாவைச் செலுத்துவர். வீட்டுக் காப்புறுதித் திட்டத்தின் கீழ் வரும் கிட்டத்தட்ட 510,000 சேமநிதி உறுப்பினர்கள் இந்த சந்தாக் குறைப்பினால் பயன்பெறுவர். இந்தக் காப்புறுதித் திட்டத்தின் படி, வீடு வாங்குவதற்கு மத்திய சேமநிதியிலிருந்து கடன்பெற்றிருக் கும் மத்திய சேமநிதி உறுப்பினர் ஒருவர், அந்தக் கடனை முழுவது மாக அடைக்குமுன்னர் திடீரென மரணமடைந்துவிட்டாலோ அல்லது நோய், விபத்து போன்ற காரணங் களால் செயல்பட முடியா மல் போய் விட்டாலோ இந்தக் காப் புறுதித் திட்டம் பாதுகாப்பளிக்கும்.

அதேநேரத்தில், வீடு வாங்க மசேநிதி பணத்தைப் பயன்படுத் தாமல் வேறு வகையில் வீட்டுக் கடன் பெறுபவர்கள் இந்தக் காப்புறுதித் திட்டத்திற்கு விண்ணப்பிக்கலாம். இது தொடர்பாக மசேநிதி நேற்று வெளியிட்ட அறிக்கையில், தனது முதலீடுகளுக்குக் கிடைத்த எதிர்பார்த்ததற்கு மேலான லாப ஈவு காரணமாகவும் இக்காப்புறுதித் திட்டத்தின்கீழ் முன்வைக்கப்பட்ட கோரிக்கைகள் தந்த அனுபவம் மூலமாகவும் உறுப்பினர்கள் இந்த சந்தாக் குறைப்புப் பலனை அனுபவிப்பர் என்று கூறியது. வீட்டுக் காப்புறுதித் திட்ட சந்தா கடைசியாக 2012ஆம் ஆண்டில் குறைக்கப்பட்டது. தற் போதைய சந்தாக் குறைப்பினால் இந்தக் காப்புறுதித் திட்டத்தின் கீழுள்ள 95% உறுப்பினர்கள் பலன் பெறுவர். இதில் நான்கில் மூவர் 10% மேலான சந்தாக் குறைப்பைப் பெறுவர்.

புகைப்படம்: ஸ்ட்ரெய்ட்ஸ் டைம்ஸ்