தென்மேற்கு வட்டாரத்தில் வசிக்கும் ஏறக்குறைய 1,500 வசதி குறைந்த மாணவர்கள் பள்ளி சென்று வருவதற்கான போக்குவரத்துப் பற்றுச்சீட்டுகளை நேற்று பெற்றனர். தென்மேற்கு சமூக மேம்பாட்டு மன்றம்- எக்ஸோன்மோபில் போக்குவரத்து உதவி நிதியின் கீழ் $55,000க்கும் அதிக மதிப்புள்ள பற்றுச்சீற்றுகள் மாணவர்களுக்கு வழங்கப்பட்டன. தென்மேற்கு சமூக மேம்பாட்டு மன்றம் - எக்ஸே„ன் மோபிலின் ஆசிய பசிபிக் பிரிவுக்கும் இடையிலான 15 ஆண்டுகளுக்கும் மேலான பங் காளித்துவத்தைக் கொண்டாடும் வகையில் நேற்று நடைபெற்ற நிகழ்ச்சியில் பேசிய வடமேற்கு வட்டார மேயருமான குமாரி லோ யின் லிங், "போக்குவரத்துப் பற்றுச்சீட்டுகளும் ஆண்டு தோறும் இடம்பெறும் வீட்டுப் பொருட்கள் விநியோகமும் வசதி குறைந்த குடும்பங்களையும் இளம் மாணவர்களையும் கைதூக்கிவிட்டுள்ளன," என்றார்.
போக்குவரத்து பற்றுச்சீட்டுப் பெற்ற மாணவர்களில் 120 பேர் நேற்று அறிவியல் மைய சுற்றுலாவுக்கு அழைத்துச் செல்லப்பட்டனர். கல்வி, வர்த்தக தொழில் அமைச்சுகளுக்கான நாடாளுமன்ற செயலாளரும் வடமேற்கு வட்டார மேயருமான குமாரி லோ யின் லிங் மாணவர்களுடன் பூச்சிகளைப் பற்றி உரையாடுகிறார். படம்: திமத்தி டேவிட்

