புதிய தொற்றுநோய்கள் பரவு வதைத் தடுக்க தகவல் தெரிவிக் கும் முறைகளைச் சீர்திருத்துவது, அதிக ஆபத்துள்ள நோயாளிகளை நாட்டிலிருந்து வெளியேறவிடாமல் தடுப்பது உட்பட பல வழிமுறை களை சுகாதார அமைச்சு பரிந்துரைத்துள்ளது. பரிந்துரைக்கப்பட்டுள்ள இந்த தொற்றுநோய் சட்ட மாற்றங்கள் மூலம் தொற்றுநோய்களை தடுப் பதி லும் கட்டுப்படுத்துவதிலும் சிங்கப்பூரின் ஆற்றல் காலத்துக்கு ஏற்ப தேவைகளுக்கு ஈடுகொடுக் கும் வகையில் இருக் கும்," என்று அமைச்சு கூறியது. பரிந்துரைகள் குறித்து இன்று முதல் ஆகஸ்ட் 27 வரையில் அமைச்சு பொதுமக் களிடம் கலந்தாலோசிக்க உள்ளது.
பறவைக் காய்ச்சல், இபோலா, மத்திய கிழக்கு மூச்சுத்திணறல் நோய் போன்றவை கடுமையான உலகளாவிய பொது சுகாதார மிரட்டலாக விளங்குகின்றன என்று அமைச்சு அறிக்கையில் குறிப்பிட்டது. முக்கிய வர்த்தக, போக்குவ ரத்து மையமான சிங்கப்பூர், பொது சுகாதார மிரட்டல்களுக்கு எதிராக விழிப்பு ணர்வுடன் இருக்க வேண்டும். மேலும் உள்ளூரிலும் வெளியூரிலும் புதிதுபுதிதாக ஏற்படும் தொற்று நோய்களுக்கு எதிராக சமூகத்தைப் பாதுகாப்பதன் மூலம் சிங்கப்பூரர்களின் உடல் ஆரோக்கியத்தையும் பாதுகாப்பது அவசியம் என்றது அமைச்சு.
படம்: ஷின்மின்

