எம்ஆர்டி நிலைய கழிவறையில் தகராறு: இரண்டு ஆடவர்கள் கைது

எம்ஆர்டி நிலைய கழிவறையில் தகராறு: இரண்டு ஆடவர்கள் கைது

1 mins read
26a77752-093f-48e0-a7df-2fe027c944cd
-

அல்ஜுனிட் எம்ஆர்டி நிலையத்திலுள்ள கழிவறையில் சிறுநீர் கழிப்பதன் தொடர்பில் சண்டையிட்ட இரு ஆடவர் களை போலிசார் கைது செய்துள்ளனர். இச்சம்பவம் கடந்த ஞாயிற்றுக்கிழமை நிகழ்ந்ததாகவும் அன்றிரவு 8.20 மணிவாக்கில் தங்களுக்கு 81 லோரோங் 25 கேலாங் என்னும் இடத்தில் இருந்து அழைப்பு வந்ததாகவும் போலிசார் கூறினர். கைது செய்யப்பட்ட ஒரு வரின் வயது 32, மற்றவருக்கு 29 வயது. இரு ஆடவர் கும்பல்களுடன் போலிசார் பேச்சுவார்த்தையில் ஈடு பட்டதைப் போன்ற படங்கள் ஸ்டோம்ப் இணையத்தளத்தில் பதிவேற்றம் செய்யப்பட்டன.

"எம்ஆர்டி நிலையத்தில் சிறுநீர் கழிக்கக் காத்திருந்த போது அடுத்து தாம் செல்ல வேண்டிய வேளையில் வேறோர் ஆடவர் குறுக்கே புகுந்து முந்தப் பார்த்ததால் அவ்விரு வருக்கும் இடையே தகராறு ஏற்பட்டது. பின்னர் அவ்விரு வரின் நண்பர்களும் ஒன்று சேரவே அது சண்டையாக மாறியது. கழிவறையில் தொடங்கிய சண்டை வீதி வரை வந்தது," என்று லியோனார்ட் என்பவர் ஸ்டோம்ப் இணையத்தளத்தில் தெரிவித்தார்.