திட்டமிட்டுச் செய்யப்படும் குற்றங் களுக்கான புதிய சட்டத்தின்கீழ் குற்றவாளியாக நிரூபிக்கப்பட்ட முதல் ஆடவருக்கு ஈராண்டு சிறைத் தண்டனையுடன் $50,000 அபராதமும் விதிக்கப்பட்டுள்ளது. 55 வயது சிங்கப்பூரரான ஓர் போ சூன் அந்த அபராதத் தொகை யைக் கட்டாவிட்டால் அவர் மேலும் இரண்டு மாதங்கள் சிறையில் இருக்கவேண்டும். செய்தித்தாள் விநியோகப் பாளராகப் பணிபுரிந்த ஓர், சட்ட விரோதமான சூதாட்டக் கும்பல் ஒன்றுக்காக செயலாற்றி வந்தார்.
அந்தக் கும்பல், ஐந்திற்கு மேற்பட்ட 4டி, டோட்டோ இணையத் தளங்களை நடத்தி வந்தது. ஸ்டீவன் சீட் சியோ பூன் 54, எரிக் சியாவ் ஹுவாட், 63, பிலிஃப் சீட் சியேன் தியென், 71, ஆகிய மூன்று சகோதரர்கள் கும்பலின் தலைவர்களாக இருந்தனர். மூன்று குழுக்களாக செயல்பட்ட கும்பலின் ஒரு பிரிவில் 62 லீன் கே சியோங் என்பவரின் கீழ் 2013ல் ஓர் வேலை செய்ய தொடங்கினார். தரகு அடிப்படையில் ஓருக்குச் சம்பளம் கொடுக்கப்பட்டது. தனது சார்பில் வாதாட வழக் கறிஞரை அமர்த்தாத ஓர், தன் மீது இரக்கம் காட்டுமாறு நீதி மன்றத்திடம் வேண்டினார். நீரிழிவு, இதய நோய் தொடர்பான பிரச்சினைகளை இருப்பதாக அவர் நீதிமன்றத்திடம் கூறினார்,

