எழுபது வயது மூதாட்டி தனது வீட்டில் மாண்டு கிடந்ததை அடுத்து, மியன்மாரைச் சேர்ந்த 23 வயது பணிப்பெண் மீது நேற்று குற்றம் சாட்டப்பட்டுள்ளது. மூன்று நாட்களுக்கு முன்னர், நண்பகல் 11.27க்கும் 12.17க்கும் இடையில் சின் மார் நுவி என்ற அந்தப் பணிப்பெண், திருவாட்டி மெஸ் ரொட்ராசஷியைக் கொலை செய்திருக்கலாம் என சந்தேகிக்கப்படுகிறது. பிற்பகல் சுமார் 3 மணிக்கு உதவிக்கான அழைப்பு வந்ததாக போலிசார் தெரிவித்தனர். சுவா சூ காங் நார்த் 6ல் உள்ள புளோக் 791ன் 12வது மாடியில் அந்த மூதாட்டி பேச்சு மூச்சின்றி கிடந்ததைக் கண்டனர். அரை மணி நேரத்திற்குப் பிறகு அவரது மரணத்தைத் துணை மருத்துவ ஊழியர்கள் உறுதி செய்தனர்.
மூதாட்டி கொலை; பணிப் பெண் மீது குற்றச்சாட்டு
1 mins read
-

