சிங்கப்பூர் ஆயுதப் படையின் கர்னல் தினேஷ் வாசு தாஷ், சிங்கப்பூர் ஆகாயப் படையின் கர்னல் கௌரவ் கீர்த்தி ஆகிய இருவரும் ராணுவ உயர் பதவியான பிரிகேடியர் ஜெனரல்களாக பதவி உயர்வு பெறுகின்றனர். அவர்கள் ஜூலை 1ஆம் தேதி முதல் அதிகாரபூர்வமாக அந்த பதவியை ஏற்க உள்ளனர். கிட்டத்தட்ட 25 ஆண்டுகளாக ராணுவத்தில் பணியாற்றி வரும் கர்னல் தினேஷ், இரண்டாம் மக்கள் தற்காப்புப் படை, தீவு தற்காப்புப் படை ஆகியவற்றின் தளபதி பொறுப்பு களை ஏற்றிருந்தார். அண்மையில் சிங்கப்பூரில் நடை பெற்ற டிரம்ப்=கிம் உச்சநிலைச் சந்திப்பின்போது பாதுகாப்பு நடவடிக் கைகளுக்கு ஆதரவு அளித்த பிரிவுகளில் இவர் பொறுப்பேற்ற தீவு தற்காப்புப் படையும் ஒன்று.
கடந்த 2009ஆம் ஆண்டு முதல் 2010ஆம் ஆண்டு வரை தற்காப்புப் பணிகளுக்காக அவர் ஆப்கானிஸ் தான் சென்றிருந்தார். 2015ல் சிங்கப்பூரின் முன்னாள் பிரதமர் லீ குவான் இயூவின் அரசாங்க இறுதிச் சடங்கில் திரு லீ குவான் இயூ நல்லுடல் பெட்டியைச் சுமந்து சென்ற தலைமை அதிகாரியாகவும் அவர் இருந்தார்.
இடமிருந்து பதவி உயர்வு பெறும் சிங்கப்பூர் ஆயுதப் படையின் கர்னல் தினேஷ் வாசு தாஷ், சிங்கப்பூர் ஆகாயப் படையின் கர்னல் கௌரவ் கீர்த்தி. படம்: தற்காப்பு அமைச்சு

