விடையளித்து தேசிய நாள் அணிவகுப்பு நுழைவுச்சீட்டை வெல்லுங்கள்

விடையளித்து தேசிய நாள் அணிவகுப்பு நுழைவுச்சீட்டை வெல்லுங்கள்

1 mins read
37842a1f-6b27-4b80-a834-99d595bb61b0
-

தேசிய அணிவகுப்பு காட்சிக்கான நுழைவுச்சீட்டைப் பெறுவதற்கு மற் றொரு வாய்ப்புள்ளது. பிரத்தியேக செயலியில் புதிர் களுக்கு விடையளித்து நுழைவுச் சீட்டை வெல்லலாம். 'NDP Jalan!' என்ற செயலி யில் பூமலை உள்ளிட்ட முக்கிய இடங் களை பயனீட்டாளர்களுக்குக் காட்டுகிறது. பின்னர் புதிர்களுக்கு விடையளிக்க வேண்டும். தேசிய அணிவகுப்பு 2018 ஏற் பாட்டுக் குழுவினரும் 'ஸ்கை ஆப்டிமம் டெக்னாலஜி' என்ற நிறு வனமும் இணைந்து உருவாக் கியுள்ள 'NDP Jalan!' என்ற அந்த செயலி இன்று அறிமுகம் காண்கிறது.

இதனை உருவாக்க தேசிய கலைகள் மன்றம், சிங்கப்பூர் கரை யோரப் பூந்தோட்டங்கள், அருங் காட்சியகம் ஆகிய அமைப்புகளும் கைகொடுத்துள்ளன. செயலி குறித்து விளக்கம் அளித்த ஏற்பாட்டுக் குழு உறுப் பினர்களில் ஒருவரான லெப்டி னெண்ட் கர்னல் மிக்கைய்ல் கலி முடின், இவ்வாண்டின் செயலி முன்னைய செயலியின் தொடர்ச்சி என்று குறிப்பிட்டார். "சிங்கப்பூரின் பிரபலமான இடங்களைக் கண்டறிய புதிய செயலி ஊக்கமூட்டுகிறது," என்றார் அவர்.

கைபேசி செயலியில் புதிர் களுக்குப் பதிலளித்து நுழைவுச் சீட்டை வெல்லலாம். படம்: ஸ்ட்ரெய்ட்ஸ் டைம்ஸ்