விரைவில் புதிய மசோதா; ஜிஎஸ்டி வரி வசூலிக்கும் அதிகாரிகளுக்கு கூடுதல் அதிகாரம்

விரைவில் புதிய மசோதா; ஜிஎஸ்டி வரி வசூலிக்கும் அதிகாரிகளுக்கு கூடுதல் அதிகாரம்

1 mins read
9ce8affb-b7bd-4e07-b7e2-85d91d133435
-

வரி வசூலிக்கும் அதிகாரிகளுக்கு கூடுதல் அதிகாரமளிக்கும் புதிய ஜிஎஸ்டி மசோதா ஒன்று விரை வில் தாக்கல் செய்யப்படும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. அதன்படி மோசமான வரிக் குற்றச்செயல் சம்பவங்களில் வலுக்கட்டாயமாக நுழைந்து கைதாணை இல்லாமல் சந்தேக நபர்களைக் கைது செய்யவும் சோதனைகளை நடத்தவும் அதி காரிகள் கூடுதல் அதிகாரம் பெற்றிருப்பர். புதிய உத்திகளு டன் வரி மோசடிகளில் ஈடுபடு வர்களை மடக்கிப்பிடிக்க மேம் பட்ட அதிகாரம் உதவும் என்று நிதியமைச்சு நேற்று வெளியிட்ட அறிக்கையில் தெரிவித்தது.

பொருள் சேவை வரியை வாடிக்கையாளர்களிடம் இருந்து வசூலித்துப் பிறகு காணாமல் போகும் விற்பனையாளர்களும் போலியான ஜிஎஸ்டி கோரிக்கை களும் கண்டுபிடிக்கப்படும் என்று அமைச்சு குறிப்பிட்டது.