டிரம்ப்-கிம் சந்திப்பு; மீண்டும் நினைவுப் பதக்கங்கள் வெளியீடு

டிரம்ப்-கிம் சந்திப்பு; மீண்டும் நினைவுப் பதக்கங்கள் வெளியீடு

1 mins read
252b7803-8b8c-4217-aedc-78260a585292
-

பொதுமக்களிடமிருந்து அதிக வரவேற்பு கிடைத்துள்ளதால் சிங் கப்பூர் நாணய ஆலை மீண்டும் டிரம்ப்-கிம் உச்சநிலை சந்திப்பை நினைவுகூரும் பதக்கங்களை வெளியிடுகிறது. இம்மாதம் 12ஆம் தேதி அமெரிக்க அதிபர் டிரம்ப்பும் வடகொரியத் தலைவர் கிம்மும் சிங்கப்பூரில் சந்தித்தனர். இந்தச் சந்திப்பு உலக வர லாற்றில் முக்கிய இடம் பிடித்துள் ளது. இதனை நினைகூரும் வகையில் மீண்டும் நினைவுப் பதக்கங்களை நாணய ஆலை வெளியிடுகிறது. அரை அவுன்ஸ் தங்கப் பதக்கத்தின் விலை 1,380 வெள்ளி. ஒரு அவுன்ஸ் வெள்ளி பதக்கத்தின் விலை 118 வெள்ளியாகும்.

பதக்கத்தின் ஒரு பக்கத்தில் அமெரிக்க, வட கொரிய நாடு களின் கொடிகள் இடம்பெறும். மற்றொரு பக்கத்தில் இரு தலைவர்கள் கைகுலுக்கும் படமும் இருவரும் கையெழுத் திட்ட கூட்டு அறிக்கையின் படமும் இடம்பெறும்.

ஆரம்பத்தில் வெளியிடப்பட்ட பதக்கங்களைப் போன்று இம்முறையும் தங்கம், வெள்ளி பதக்கங்களை நாணய ஆலை வெளியிடுகிறது. படம்: நாணய ஆலை