ஓபைக்குக்கு காலக்கெடு

1 mins read
7d718df1-1a03-4128-82f0-a32e5cbbdb9b
-

சைக்கிள் பகிர்வு நிறுவனமான ஓபைக் சிங்கப்பூரில் தனது சேவைகளை இவ்வாரம் அதிர டியாக நிறுத்தியது. ஆனால் சாலைகளில் தாறு மாறாக ஆங்காங்கு நிறுத்தப் பட்டுள்ள சைக்கிள்களை அது அகற்றவில்லை. இந்நிலையில் பொது இடங் களில் உள்ள சைக்கிள்கள் ஜூலை 4ஆம் தேதிக்குள் அகற்ற வேண்டும் என்று ஒபைக்குக்கு நிலப் போக்கு வரத்து ஆணையம் காலக்கெடு விதித்துள்ளது. அந்நிறுவனத்தின் சுமார் 14,000 சைக்கிள்கள் சிங்கப்பூர் முழுவதும் பல இடங்களில் நிறுத்திவைக்கப்பட்டுள்ளன.

ஓபைக் தனது சேவையை நிறுத்தியதால் அவற்றின் சைக்கிள்களை தற்போது வாடிக்கை யாளர்கள் பயன்படுத்த முடியாது. புதன்கிழமை அன்று ஓபைக் பிரதிநிதிகளைச் சந்தித்த தாகக் கூறிய ஆணையம், ஒரு வாரத்திற்குள் சைக்கிள்கள் அகற்றப்படாவிட்டால் ஆணையம் அவற்றை அப்புறப்படுத்தும் நடவ டிக்கைகளை எடுக்கும் என்று தெரிவிக்கப்பட்டதாகத் தெரிவித் தது. அப்படி ஆணையம் சைக்கிள் களை அப்புறப்படுத்தினால் அதற் குரிய செலவுகளையும் ஏற்க வேண்டும் என்றும் ஓபைக்கிடம் தெரிவிக்கப்பட்டுள்ளது.