கென்யா காய்கறிச் சந்தையில் தீ: குறைந்தது 15 பேர் மரணம்

கென்யா காய்கறிச் சந்தையில் தீ: குறைந்தது 15 பேர் மரணம்

1 mins read

நைரோபி: கென்யா தலைநகர் நைரோபியில் உள்ள காய்கறிச் சந்தையில் நேற்று அதிகாலை மூண்ட தீயில் குறைந்தது 15 பேர் உயிரிழந்ததாக போலிசார் கூறினர். சந்தையில் மூண்ட தீ படிப்படியாக பக்கத்தில் இருந்த கட்டடங்களுக்கும் பரவியது. இதில் பலர் உயிரிழந்ததாகவும் சுமார் 70 பேர் காயம் அடைந்ததாகவும் தீயணைப்புப் படை அதிகாரி ஒருவர் கூறினார். தீயில் உடல் கருகி உயிரிழந்தவர்களின் உடல்களை மீட்பதில் சிரமம் ஏற்பட்டுள்ளதாகவும் அவர் கூறினார்.