ரூபனேஸ்வரன் ஞானசுப்பிரமணியன்
பெற்றோர்களும் பிள்ளைகளும் ஒன்றாக இணைந்து பிள்ளைகளின் அறிவாற்றலைத் தூண்டும் பல் வேறு நடவடிக்கைகளில் ஈடுபட ஊக்குவிக்கும் கண்காட்சி ஒன்று சிங்கப்பூர் எக்ஸ்போ ஹால் 6ல் நடைபெறுகிறது. சிங்கப்பூர் பிரஸ் ஹோல்டிங்ஸ் நிறுவனத்தின் ஸ்பியர் எக்ஸிபிட்ஸ் பிரிவின் ஏற்பாட்டில் நடைபெறும் இந்த 'கிட்ஸ் அகடமி' கண்காட்சி யில் சுவாரஸ்யமான வழிகளில் சிறார்களின் ஒட்டுமொத்த வளர்ச் சிக்கு உதவும் நடவடிக்கைகள் இடம்பெற்றுள்ளன.
2009ல் தொடங்கப்பட்ட இந்தக் கண்காட்சி, இவ்வாண்டு மூன்றி லிருந்து 12 வயதிற்கு உட்பட்ட சிறுவர்களையும் 25லிருந்து 45 வயதிற்கு உட்பட்ட பெற்றோர்களை யும் இலக்காகக் கொண்டு ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. நேற்று தொடங்கிய கண்காட்சி ஞாயிறு வரை நடைபெறும்.
'லேகோ ரோபோட்டிக்ஸ்', களி மண், பாசிமணிகளைக் கொண்டு கலைப்பொருட்களை உருவாக்கும் கேளிக்கை அங்கங்கள் உண்டு. 'சுவையான அறிவியல்' அங்கத் தில் பெற்றோரும் பிள்ளைகளும் பல அறிவியல் தொடர்பான நட வடிக்கைகளில் ஈடுபட்டு ஒன்றாக கற்றுக்கொள்வதற்கு வாய்ப்புகள் அளிக்கப்படுகின்றன.
"பிள்ளைகள் மகிழ்ச்சியாக பல்வேறு பயனுள்ள நடவடிக்கை களில் ஈடுபடுவதற்கு இது ஒரு நல்ல வாய்ப்பு," என்றார் நேற்று கண்காட்சிக்கு வந்திருந்த திருமதி திவ்யா பழனியப்பன், 36.
தமிழ் சொல் விளையாட்டில் மூழ்கியிருக்கும் எட்டு வயது ரித்திஷ்யாகாஷ், இத்தகைய கண்காட்சியில் கலந்துகொள்வது இதுதான் முதல் முறை. படம்: ரூபனேஸ்வரன்

