பல்கலைக்கழகங்களின் முழுத் திறனை வெளிப்படுத்துவதில்லை

பல்கலைக்கழகங்களின் முழுத் திறனை வெளிப்படுத்துவதில்லை

1 mins read
70533eb7-fd00-4eec-bfc4-9751c996c413
-

எல்லா பல்கலைக்கழகங்களையும் ஒரே அளவுகோலில் மதிப்பிடும் தற்போதைய பல்கலைக்கழக தர வரிசை முறையில்லாதது என்று கல்வி அமைச்சர் ஓங் யி காங் கூறியுள்ளார். மூன்று நாள் கூட்டத்தின் முடிவில் அனைத்துலக நிபுணர் குழு வின் கருத்தும் இதுவாகவே இருந்தது. "பரந்த அளவிலான மதிப்பீட்டு முறை தேவை. ஏனெனில் சிங்கப்பூரின் ஆறு சுயேட்சைப் பல்கலைக்கழகங்களுக்கும் தனித் தனியான இலக்குடன் சமுதாய, பொருளியல் குறிக்கோளும் உள் ளன," என்று திரு ஓங் அனைத்து லக கல்வித்துறை ஆலோசனை குழு கூட்டத்தின் முடிவில் தெரிவித்தார்.

"ஒருவேளை ஒவ்வொரு பல் கலைக்கழகத்தின் வெற்றியையும் சாதனைகளையும் மதிப்பிட வெவ் வேறு வகையான அளவுகோல்கள் தேவைப்படலாம்," என்றார் அவர். கல்வி அமைச்சுக்கும் சிங்கப்பூரின் பல்கலைக்கழகங் களுக்கும் கல்வி, ஆய்வுத் துறை யின் போக்குகள் குறித்த ஆலோ சனை வழங்குவதற்காக ஒவ்வொரு இரண்டு முதல் மூன்றாண்டு களுக்கு ஒருமுறை சந்திக்கும் இந்தக் குழுவின் 11வது கூட்டம் அண்மையில் நடைபெற்றது.

கல்வி அமைச்சர் ஓங் யி காங். ST PHOTO: LIM YAOHUI