முதல்வர் நாராயணசாமி: ஆளுநர்களிடம் இருந்து விடுதலை பெற போராடுகிறோம்

முதல்வர் நாராயணசாமி: ஆளுநர்களிடம் இருந்து விடுதலை பெற போராடுகிறோம்

1 mins read
6117c9fa-22a6-45b3-86bb-01f30e92efd9
-

புதுச்சேரி: சுதந்திர போராட்டத்தைப் போல் ஆளுநர்களிடம் இருந்து விடுதலை பெற போராடி வருகிறோம் என்று முதல்வர் நாராயணசாமி கூறினார். "புதுச்சேரியில் பெண்கள் மிகவும் பாதுகாப்பாக இருக்கிறார்கள். பெண்களின் பாதுகாப்புப் பற்றி பிரதமர் மோடி காங்கிரசிடம் கற்றுக்கொள்ள வேண்டும். நள்ளிரவு 2 மணிக்குக் கூடப் பெண்கள் தனியாக நகைகள் அணிந்து பாதுகாப்பாக நடந்து செல்லும் நிலை புதுச்சேரியில் உள்ளது.

முன்னாள் முதல்வர் ரங்கசாமி ஆட்சியில் கொலை, கொள்ளை, வழிப்பறி, வீடு அபகரிப்பு என சட்டம், ஒழுங்கு சீர்கெட்டுக் கிடந்தது. காங்கிரஸ் ஆட்சியில் சட்டம், ஒழுங்கு சீராக உள்ளது. முதல்வருடனோ அமைச்சர்களுடனோ ஆலோசிக்காமல் ஆளுநர் கிரண்பேடி நேரடியாக கள ஆய்வுக்குச் செல்லக்கூடாது. புதுச்சேரியில் ஆரம்பித்த இந்த நோய் தற்போது தமிழகத்திலும் பரவியுள்ளது. ஆளுநர்களை வைத்து மாநில அரசுகளை மோடி அரசு மிரட்டுகிறது. சுதந்திர போராட்டத்தைபோல் தற்போதுள்ள ஆளுநர்களிடம் இருந்து விடுதலைபெற போராடி வருகிறோம்," என்றார்.

மேலும் செய்திகளுக்கு