புதிய வசதிகளுடன் அங் மோ கியோ பலதுறை மருந்தகம்

புதிய வசதிகளுடன் அங் மோ கியோ பலதுறை மருந்தகம்

1 mins read
f704da1a-2449-4f0e-85e9-22d070cb0736
-

மூத்தோருக்கும் உடற்குறையுள் ளோ ருக்குமான புதிய வசதி களுடன் புதிய அங் மோ கியோ பலதுறை மருந்தகம் நேற்று அதி காரபூர்வமாகத் திறந்து வைக்கப் பட்டது. கிட்டத்தட்ட $44 மில்லியன் செலவில் கட்டப்பட்ட இந்தப் பல துறை மருந்தகம், இவ்வாண்டு ஜனவரியிலிருந்து அங் மோ கியோ சென்ட்ரல் 2ல் செயல்பட்டு வரு கிறது. மொத்தம் 8,752 சதுர மீட்டர் பரப்பளவில் அமைந்துள்ள இந்த வளா கம், ஏற்கெனவே அங் மோ கியோ அவென்யூ 8ல் செயல்பட்டு வந்த பலதுறை மருந்தகத்தை விட மூன்று மடங்கு பெரியது. இந்தப் புதிய அங் மோ கியோ பலதுறை மருந்தகத்திற்கு தினந் தோறும் ஏறக்குறைய 1,500 நோயாளி கள் வந்து செல்கின்றனர். அவர்களில் மூன்றில் ஒரு பங் கினர் 65 வயதுக்கும் மேற்பட்டவ ர்கள். பழைய வளாகத்தைவிட தினமும் கூடுதலாக சுமார் 200 நோயாளிகள் புதிய வளாகத்திற்கு வந்து செல்கின்றனர்.

புதிதாக திறக்கப்பட்டுள்ள அங் மோ கியோ பலதுறை மருந்தகத்தின் பல் மருத்துவ அறையில் சக்கர நாற்காலியை ஒரு குறிப்பிட்ட கோணத்திற்குச் சாய்க்கும் சிறப்புச் சாதனத்தின் பயன்பாட்டை பிரதமர் லீ சியன் லூங்கும் சுகாதார மூத்த துணை அமைச்சர் லாம் பின் மின்னும் (இடக்கோடி) பார்வையிடுகின்றனர். படம்: ஸ்ட்ரெய்ட்ஸ் டைம்ஸ்