கடன் முதலை தொல்லை: 16 வயது பெண் கைது

கடன் முதலை தொல்லை: 16 வயது பெண் கைது

1 mins read

கடன் முதலை தொடர்பான நடவடிக்கைகளில் ஈடுபட்டதன் சந்தேகத்தின் பேரில் 16 வயது பெண் ஒருவரை போலிஸ் கடந்த வியாழக்கிழமை கைது செய்தது. உட்லண்ட்ஸ் கிரசென்ட்டில் கடந்த மாதம் 14ஆம் தேதி கடன் முதலை தொல்லை குறித்து தனக்கு தகவல் கிடைத் ததாக நேற்று வெளியிட்ட செய்தி அறிக்கை ஒன்றில் போலிஸ் கூறியது. குடியிருப்பாளர்கள் சிலரின் வீட்டு வாயில்கள் சைக்கிள் பூட்டுகளால் பூட்டப்பட்டிருந்ததா கவும் கடன் தொடர்பில் குறிப்பு கள் வைக்கப்பட்டிருந்ததாகவும் போலிஸ் தெரிவித்தது. போலிஸ் கண்காணிப்பு கேம ராக்களின் உதவியுடன் போலிஸ் மேற்கொண்ட தீவிர விசார ணைக்கு பிறகு ஜூரோங் போலிஸ் பிரிவைச் சேர்ந்த அதிகாரிகள் அந்தப் பெண்ணை அடையாளம் கண்டு ஹவ்காங் அவென்யூ 8ல் அவரைக் கைது செய்தனர்.

மேலும் செய்திகள்