500க்கும் மேற்பட்ட சிங்கப்பூர் ஆயுதப்படையினருக்கு அங்கீகாரம், நிலை உயர்வு

500க்கும் மேற்பட்ட சிங்கப்பூர் ஆயுதப்படையினருக்கு அங்கீகாரம், நிலை உயர்வு

1 mins read
0fc9391f-abc4-4110-957f-3b03ffb52fc8
-

தற்காப்பு அமைச்சுக்கும் சிங்கப் பூர் ஆயுதப்படைக்கும் மேலும் தொண்டாற்றும் வகையில் நன்கு செயல்பட்டு இருக்கும் அதிகாரி கள், ராணுவ நிபுணர்கள், வாரண்ட் அதிகாரிகள், தற்காப்பு நிர்வாக அதிகாரிகளை அங்கீகரித்துப் பாராட்டும் வகையில் அவர்களுக் குப் பதவி உயர்வு வழங்கப்படு கிறது. தற்காப்பு அமைச்சு தலைமையகம், ராணுவம், கடற்படை, ஆகா யப் படை ஆகியவற்றைச் சேர்ந்த 461 அதிகாரிகள், 75 ராணுவ நிபுணர்கள், 40 வாரண்ட் அதிகா ரிகளுக்குத் தற்காப்பு அமைச்சும் சிங்கப்பூர் ஆயுதப்படையும் பதவி உயர்வு அளித்துள்ளன.

இந்த ஆண்டு சாதனை அள வாக 61 மூத்த தேசிய சேவை யாளர்கள் அடுத்த மேல் நிலைக்கு உயர்ந்துள்ளார்கள். தற்காப்பு அமைச்சர் டாக்டர் இங் எங் ஹென், தற்காப்புப் படைத் தலைவர் மேஜர் ஜெனரல் (எம்ஜி) மெல்வின் ஓங் ஆகியோர் அதிகாரிகளுக்கு அண்மையில் பதவி உயர்வு சான்றிதழ்களை வழங்கி சிறப்பித்தனர்.

எம்ஜி மெல்வின் ஓங், லெஃப் டினெண்ட் ஜெனரல் நிலைக்கு உயர்ந்து இருக்கிறார்.

மேல் நிலைக்கு உயர்ந்த 'பிஜி' தினேஷ் வாசு தாஸ். (இடது) 'பிஜி' கௌரவ் கீர்த்தி. படம்: தற்காப்பு அமைச்சு

மேலும் செய்திகள்