ஸ்கில்ஸ்ஃபியூச்சர் பயிற்சி வகுப்புகளைத் தேர்ந்தெடுப்பதற்கு முன் அவற்றில் ஏற்கெனவே பயின்றோர் அப்பயிற்சி வகுப்புக் குத் தந்த மதிப்பீட்டுக் குறியீட்டைக் கொண்டு இனிப் பதிவு செய்ய விரும்புவோர் தெரிவு செய்யலாம். பயிற்சி வகுப்பின் இறுதியில் அதில் பயின்றவர்களது திருப்தி நிலை, கற்றதை அடுத்த ஆறு மாதங்களில் தங்களது பணியில் பயன்படுத்திய அளவு ஆகியவற்றின் அடிப்படையில் இந்த மதிப் பீட்டுக் குறியீடு வழங்கப்படும்.
இந்த மதிப்பீட்டுக் குறியீட்டை அனைவரும் பார்க்க முடியும் என்று இணையத்தளம், செயலி இரண்டையும் இயக்கும் 'ஸ்கில்ஸ் ஃபியூச்சர் சிங்கப்பூர்' அமைப்பு தெரிவித்தது. பாய லேபாரில் உள்ள வாழ்நாள் கற்றல் கழகத்தில் நேற்று நடைபெற்ற 'ஸ்கில்ஸ் ஃபியூச்சர் விழா'வைத் தொடங்கி வைத்த கல்வி மூத்த துணை அமைச்சர் சீ ஹொங் டாட் இந்த மாற்றங்கள்பற்றி பேசினார்.

