வீ. பழனிச்சாமி
இரண்டாம் ஆண்டாக நடைபெறும் குழுவுக்கு அறுவர் கொண்ட தமிழ் முரசு ஃபுட்சால் காற்பந்துப் போட்டி இன்று காலை 8 மணி முதல் மாலை 6 வரை நடைபெறும். யீசூன் சென்ட்ரல் 1ல் அமைந் திருக்கும் நீ சூன் விளையாட்டு மையத்தில் உள்ள ஃபுட்சால் அரீனா@யீசூன் அரங்கில் இடம் பெறும் இப்போட்டியில் மொத்தம் 20 குழுக்கள் பங்கேற்கின்றன. சிங்கப்பூரர்கள், நிரந்தரவாசி கள் என பத்து முதல் பன்னிரண்டு வயதுக்குட்பட்ட சிறார் பங்கேற் கும் இப்போட்டியை இந்த ஆண்டு ஏற்று நடத்த தமிழ் முரசுக்கு உதவிக்கரம் நீட்டியுள்ளது மக்கள் கழக நற்பணிப் பேரவை. முதல் சுற்று ஆட்டங்களுக்குப் பிறகு, பிரிவில் முதல் இரு நிலை களில் வரும் குழுக்கள் அடுத்த சுற்றில் பிரதானப் பிரிவில் பங் கேற்று மற்ற பிரிவுகளில் முதல் இரு நிலைகளில் வந்த குழுக்களு டன் பொருதும்.
முதல் சுற்று ஆட்டங்களில் முதல் இரு நிலைகளுக்குக் கீழ் வரும் குழுக்கள் 'பிளேட்' எனும் பிரிவில் அதே நிலையில் வந்த குழுக்களுடன் போட்டியிடும். பிரதான பிரிவிலிருந்து நான்கு குழுக்களும் 'பிளேட்' பிரிவில் நான்கு குழுக்களும் தத்தம் பிரி வில் அரையிறுதி ஆட்டங்களில் விளையாடும். வெற்றி பெறும் குழுக்கள் தத்தம் பிரிவுகளின் இறுதி ஆட்டத்தில் சந்திக்கும். பிரதான பிரிவில் வெற்றி பெறும் குழுவுக்கு எஸ். சந்திரதாஸ் சவால் கிண்ணத்துடன் $1,200 பெறுமானமுள்ள பரிசுப் பொருட் கள் வழங்கப்படும். இறுதியில் இரு பிரிவுகளிலும் நான்கு நிலைகளில் வரும் குழுக்க ளின் ஆட்டக்காரர்கள் அனை வருக்கும் பதக்கங்கள் வழங்கப் படும். இரு பிரிவுகளின் இறுதி ஆட் டங்கள் நடைபெறுவதற்கு முன்ன தாக சிறப்பு ஆட்டம் ஒன்று இடம் பெறும்.
அதில் வசந்தம் ஒளிவழியின் நட்சத்திரங்களும் சூரியா மலாய் ஒளிவழியின் நட்சத்திரங்களும் தங்கள் காற்பந்துத் திறனை வெளிப்படுத்துவார்கள். இந்த ஆட்டம் பற்றி குறிப்பிட்ட வசந்தம் குழுவின் தலைவரான பாடகர் என். இளமாறன், "வெவ் வேறு குழுக்களுடன் போட்டி போடுவது எங்களுக்கு விருப்ப மான ஒன்று. வசந்தம் கலைஞர் களில் பலர் காற்பந்துப் பிரியர்கள் என்று தெரியவந்ததும் அனை வரும் சேர்ந்து வசந்தம் காற்பந்துக் குழுவை அமைத்தோம். "முன்பு வாரத்துக்கு இரு முறை போட்டிகளில் விளையாடு வோம். இப்போது பெரும்பாலோர் வேலை காரணங்களால் வர இய லாததால் மாதத்துக்கு ஒரு முறை யாவது போட்டிகளில் பங்கேற் கிறோம்," என்றார்.
"வசந்தம் குழுவுடன் காற்பந்தாட்டப் போட்டியில் பங்கேற்பது என்பது நண்பர்கள் ஒன்று சேர்வது போன்ற உற்சாகத்தை ஏற்படுத்துகிறது. இருந்தாலும் கடைசி வரை போராடி வெற்றி பெற உறுதியாக இருக்கிறோம்," என்றார் சூரியா ஒளிவழி காற் பந்துக் குழுவின் தலைவர் ஷாரின் அஸ ஹார் முகம்மது. "சூரியா காற்பந்துக் குழு மாதம் ஒன்று அல்லது இரு முறை நட்புமுறை ஆட்டங்களில் பங் கேற்று வருகிறோம்," என்று சொன்னார் நடிகர், படைப்பாளர், தயாரிப்பாளர், இயக்குநர் எனப் பல பரிமாணம் கொண்ட ஷாரின்.
பொதுமக்கள் தங்களின் அபி மான வசந்தம் காற்பந்து நட்சத்தி ரங்களுடன் புகைப்படம் எடுத்துக் கொள்ளலாம். கடந்த ஆண்டு போட்டிகளில் பங்கேற்ற குழுக்களும் புதிய குழுக்களும் தங்கள் திறமையை வெளிப்படுத்தி பரிசுகளைத் தட்டிச் செல்ல இன்று களமிறங்குகின்றன. இலங்கைக்கான சிங்கப்பூர் தூதர் எஸ்.சந்திரதாஸ் சிறப்பு விருந்தினராகக் கலந்துகொண்டு, பரிசுகளை வழங்குவார். எஸ்.சந்திரதாஸ் சவால் கிண் ணமும் $1,200 மதிப்புள்ள பரிசுப் பொருட்களும் எந்தக் குழுவுக்குக் கிடைக்கும் என்பது இன்று மாலை 6 மணிக்குத் தெரிந்துவிடும்.
வசந்தம் குழுவுக்குப் பாடகர் என். இளமாறன் (முதல் வரிசையில் வலது கோடி) தலைமை தாங்குகிறார். படம்: இளமாறன்

