வைப்புத் தொகைகளைத் திருப்பிக் கொடுப்பதில் 'ஓபைக்' மும்முரம்

1 mins read
c10534b0-b1df-4291-97cc-e89ee728f452
-

மிதிவண்டிப் பகிர்வு சேவையை வழங்கும் 'ஓபைக்' நிறுவனம், கடந்த வாரம் இங்கு செயல்படு வதை நிறுத்தியதைத் தொடர்ந்து, பயனீட்டாளர்களின் வைப்புத் தொகைகளைத் திருப்பிக்கொடுப் பதற்கான வழிகளை ஆராய்கிறது. சம்பந்தப்பட்ட தரப்புகளுடன் இணைந்து தீர்வு காண 'ஓபைக்' முனைகிறது. சிங்கப்பூரில் 'ஓபைக்' தனது செயல்பாடுகளை நிறுத்துவதாக சென்ற மாதம் 25ஆம் தேதி அறிவித்தது. சீனாவில் நிறுவப்பட்ட அந்நிறு வனம், பாதிக்கப்பட்ட அனைவ டிடமும் மன்னிப்பு கேட்பதாகவும் கடந்த வாரத்தில் எழுந்த சிக்கல்களை களையப் பாடுபடு வதாகவும் தெரிவித்தது. நிறுவனம் தனது செயல்பாடு களை நிறுத்தியதையடுத்து, வைப்புத் தொகைகள் திரும்பக் கிடைக்குமா என்று பயனீட்டாளர் களிடையே ஐயம் எழுந்ததாகக் கூறப்பட்டது. அந்த வைப்புத் தொகையின் உச்சவரம்பு, $49. தகவல்கள் அனைத்தையும் உறுதிசெய்த பின்னர், திருப்பிக் கொடுப்பது பற்றிய முழு விவரங் கள் அறிவிக்கப்படும் என்றது 'ஓபைக்'.

படம்: LIANHE ZAOBAO