மக்கள் சந்திப்பில் நடந்தது பற்றி அமைச்சர் இந்திராணி ராஜா விளக்கம்

மக்கள் சந்திப்பில் நடந்தது பற்றி அமைச்சர் இந்திராணி ராஜா விளக்கம்

1 mins read

பிரதமர் அலுவலக அமைச்சரும் நிதி, கல்விக்கான இரண்டாம் அமைச்சருமான இந்திராணி ராஜா, மக்கள் சந்திப்பின்போது ஒருவருடன் உரையாடியது குறித்து வெளியிடப்பட இணையத் தகவல் பற்றி விளக்கம் அளித்துள்ளார். தஞ்சோங் பகார் குழுத்தொகுதியைச் சேர்ந்த குமாரி இந்திராணி, தியோங் பாரு ஈரச்சந்தையில் மக்களைச் சந்தித்துக்கொண்டிருந்தார். மாதந்தோறும் அவர் அந்தச் சந்திப்பை மேற்கொள்வது வழக்கம். கடந்த ஞாயிற்றுக்கிழமை நிகழ்ந்த சந்திப்பில் குமாரி இந்திராணி ராஜா அங்கு வயதான தம்பதியினரைக் கண்டார். மனைவி நல்ல முறையில் உரையாடியபோதும் அவரது கணவர், தன்னைத் தொந்தரவு செய்ய வேண்டாம் என்று கூறியதாக குமாரி இந்திராணி தமது ஃபேஸ்புக் பதிவில் தெரிவித்தார்