தாய்லாந்தில் நிகழ்ந்த விபத்தில் சிங்கப்பூர் சைக்கிளோட்டி மரணம்

தாய்லாந்தில் நிகழ்ந்த விபத்தில் சிங்கப்பூர் சைக்கிளோட்டி மரணம்

1 mins read
6528a96b-a6d8-4a15-a0b0-25e828124c16
-

தாய்லாந்தின் சியாங் மாய் மாநிலத்தில் 57 வயது ஓட்டுநர் டெனிசன் சியா, தனது மிதிவண்டியை ஓட்டிக் கொண் டிருந்தபோது விபத்துக் குள்ளாகி மாண்டார். கடந்த ஞாயிற்றுக் கிழமை காலையில் அந்த விபத்து நேர்ந்தது. ஓய்வுபெற்ற வர்த்தகரான திரு சியா கடந்த மூன்று ஆண்டுகளாக அங்கு வசித்து வந்தார். தாய்லாந்தைச் சேர்ந்த தமது காதலியுடன் அவர், இருதட சாலையில் மிதிவண்டியை ஓட்டிக் கொண்டிருந்தபோது, எதிரே வந்த ஐந்து டன் லாரி அவர் மீது மோதியதாகக் கூறப்படுகிறது. அந்த தம்பதியர் ஹாங்டோங் மாவட்டத்திலுள்ள பிரபல மிதி வண்டிப் பாதையில் சென்று கொண்டிருந்ததாக, திரு சியாவின் தாய்லாந்து நண்பரான 55 வயது திரு ஜஸ்டின் தெரிவித்தார். மே ஹியா நகரத்திலுள்ள தனது வீட்டிலிருந்து புறப்பட்ட திரு -சியா, சமோவெங் வட்டா ரத்தில் விபத்துக்குள்ளானதாக திரு ஜஸ்டின் கூறினார்.