சிறந்த சிங்கப்பூரை உருவாக்க நாட்டின் 145,000 பொதுச் சேவை ஊழியர்கள் பணிவுடனும் மற்றவர்களுடன் இணைந்தும் செயல்பட வேண்டும் என்று வலி யுறுத்தப்பட்டுள்ளது. பொதுச்சேவை வாரத்தை யொட்டி பொதுச்சேவை பிரிவு நேற்று பதிவேற்றிய காணொ ளியில் பொதுச் சேவைக்கு பொறுப்பு வகிக்கும் அமைச்சர் சான் சுன் சிங் இவ்வாறு கேட்டுக் கொண்டார். "நாம் அடக்கமுடன் செயல் பட்டால் எல்லாவற்றையும் நாமே செய்துவிட முடியாது, ஒட்டு மொத்த நாட்டுடன் சேர்ந்து செயல்படுவது அவசியம் என் பதை நமக்கு நாமே நினைவூட்டிக் கொள்ளலாம். அப்போதுதான் ஒட்டுமொத்த நாடும் நம்மோடு சேர்ந்து பயணம் செய்யும்.
வர்த்தக, தொழில் அமைச்சர் சான் சுன் சிங்

