பிடிஓ வீடுகளின் எண்ணிக்கை 16,000க்கு குறையும்: வீவக

பிடிஓ வீடுகளின் எண்ணிக்கை 16,000க்கு குறையும்: வீவக

1 mins read
379b740a-6d89-4633-95a6-789569b40781
-

வீடமைப்பு வளர்ச்சிக் கழகத்தின் (வீவக) மறுவிற்பனை வீட்டு விலை கடந்தாண்டுடன் ஒப்புநோக்க இவ்வாண்டின் இரண்டாம் காலாண்டில் 1.5% குறைந்தது. கழகம் நேற்று வெளியிட்ட முன்னுரைப்புகளில் அவ்வாறு தெரிவிக்கப்பட்டது. இவ்வாண்டின் முதல் கால் ஆண்டுடன் ஒப்புநோக்க, இரண்டாம் காலாண் டின் மறுவிற்பனை விலை 0.1% அதிகரித்தது.வீவக மறுவிற்பனை வீட்டுச் சந்தை நிலைத்தன்மை அடைந்து வரும் வேளையில், விற்பனைக்கு விடப்படும் தேவைக்கேற்ப கட்டித் தரப்படும் வீடுகளின் (பிடிஓ) எண்ணிக்கை 17,000 வீடுகளில் இருந்து கிட்டத்தட்ட 16,000க்கு குறைக்கும் என்று கழகம் தெரிவித்தது. இவ்வாண்டின் முதற் பகுதியில் 11,373 வீடுகளை விற்பனைக்கு விட்டதாக கழகம் தெரிவித்தது. அந்த எண்ணிக்கையில் 7,634 பீடிஓ வீடுகளும் 3,739 முன்னைய விற்பனையில் எஞ்சிய வீடுகளும் அடங்கும் என்றது கழகம்.