சென்னை: ஜெயலலிதாவின் உண்மையான தொண்டர்களில் 90 விழுக்காட்டினர் தம்முடன் தான் உள்ளனர் என்று அமமுக துணைப் பொதுச் செயலர் டிடிவி தினகரன் தெரிவித்துள்ளார். சென்னையில் செய்தியாளர்க ளிடம் பேசிய அவர், தமிழகத்தில் அரசு ஒன்று இருப்பதாக மக்கள் யாரும் கருதவில்லை என்றார். "தமிழக அரசு இதுவரை மக்களுக்கு என்ன தான் செய் தது? அரசாங்கம் தங்களை துன்புறுத்துவதாக மக்கள் நினைக்கிறார்கள். விரைவில் இந்த அரசுக்கு முடிவு வரும். "ஆட்சி, அதிகாரத்தில் இருப் பதால் அதிமுக உயிரோடு இருக் கிறது. ஆட்சி இறங்கினால் எல்லாரும் எங்களிடம் வருவார் கள்," என்றார் தினகரன். பசுமை வழி சாலையை எதிர்ப் பதில் தங்கள் வீரியம் குறைய வில்லை என்று குறிப்பிட்ட அவர், இத்திட்டத்துக்கு எதிராக கண் டன ஆர்ப்பாட்டம் நடத்த காவல் துறையிடம் அனுமதி கேட்டதாக வும், இதுவரை அனுமதி கிடைக்க வில்லை என்றும் தெரிவித்தார். "இது தொடர்பாக நீதி மன்றத்திற்கு சென்று அனுமதி பெறுவோம். நிச்சயமாக போராட் டம் நடக்கும். "நீதிமன்றம் சரியாக முடிவு எடுத்ததால் காவிரி மேலாண்மை ஆணையம் அமைந்தது. தமிழக அரசு ஏதும் செய்யவில்லை," என் றார் தினகரன்.
தொண்டர்கள் எங்கள் பக்கம்: தினகரன் திட்டவட்டம்
1 mins read

