சிண்டாவின் துணைப்பாட வகுப்புக் கட்டண மாற்றத்தால் பயனடையும் பல குடும்பங்கள்

1 mins read
45872831-147c-485d-a6a1-f4ab6563042d
-

எஸ். வெங்கடேஷ்வரன்

நான்கு மகன்களைக் கொண்ட திரு ஃப்ராங்க்கிளின் இனிமேல் தமது குழந்தைகளின் துணைப்பாட வகுப்புகளுக்கான கட்டணத்தைப் பற்றி கவலைப்படத் தேவையில்லை. அண்மையில் சிண்டா எனும் சிங்கப்பூர் இந்தியர் மேம்பாட்டுச் சங்கம் தனது திட்டங்களுக்கான சலுகைக் கட்டண தகுதி அடிப் படைகளை மாற்றியதே இதற்குக் காரணம். புதிய மாற்றங்களின்படி பங் கேற்போரின் தனி நபர் வருமானம் $1,000க்குக் கீழ் இருந்தால் சிண் டாவின் திட்டங்களுக்கு முழு கட் டண விலக்கு கொடுக்கப்படும். $1,001க்கும் மேல் தனி நபர் வரு மானம் பெறும் குடும்பத்திலிருந்து வந்தால், ஒவ்வொரு திட்டத்திற்கும் $10 கட்டணம் செலுத்தினால் போதும்.

சிண்டாவின் 'ஸ்டெப்' துணைப்பாடத் திட்டம் அல்லது 'டீச்' திட்டம் போன்ற துணைப் பாடத் திட்டங்களில் சேரும் மாண வர்கள், எத்தனை பாடங்களில் சேர்ந்தாலும் ஒரு முழு ஆண்டுக் கும் கட்டணமாக $10 மட்டும் செலுத்தினால் போதும். இதற்கு முன் இருந்த கட்டணத் திட்டத்தின் கீழ், தனி நபர் வரு மானம் $650க்கும் கீழ் இருக்கும் போதுதான், முழு கட்டண விலக் கிற்குத் தகுதி பெற முடியும். தனி நபர் வருமானம் $650கும் $1,000க்கும் இடையே இருப்பவர்க ளுக்குக் குறிப்பிட்ட அளவிற்கான சலுகை வழங்கப்பட்டது.

தங்கள் நான்கு பிள்ளைகளுடன் மில்டன் ஃப்ராங்க்ளின் சந்தனமேரி தம்பதிகள். படம்: ஸ்ட்ரெய்ட்ஸ் டைம்ஸ்