அடுத்த ஆண்டிலிருந்து பல துறைத் தொழிற்கல்லூரிகளில் முழு நேரப் பட்டயக் கல்விக்கு வேலை செய்துகொண்டிருக்கும் பெரியவர்கள் விண்ணப்பிக்கும் போது, அவர்களின் வேலை அனுபவமும் கருத்தில் கொள்ளப்படும். தற்போது முழு நேரப் பட்டயக் கல்விக்கு வேலை செய்துகொண்டி ருக்கும் பெரியவர்கள் விண்ணப்பிக்கும்போது அவர்களின் ஏட்டுக் கல்வித் தகுதிகள் மட்டுமே கருத்தில் கொள்ளப்படுகின்றன. பகுதி நேரப்படிப்புக்கு மட்டும் தான் வேலை அனுபவத்துக்கு முக்கியத்துவம் கொடுக்கப்பட்டு வந்துள்ளது.
இந்த மாற்றங்களை நேற்று அறிவித்த கல்வி அமைச்சர் ஓங் யி காங், முன்பு கருத்தில் எடுத்துக் கொள்ளப்பட்ட ஏட்டுக்கல்வித் தகுதிகள் தற்போதைய சூழ்நிலை யில் விண்ணப்பதாரர்களின் தகு தியை முழுமையாகப் பிரதிபலிப்ப தில்லை என்று விவரித்தார். ஏட்டுக்கல்வியைத் தவிர, வேலை அனுபவத்தையும் அவர் களின் செயல்திறனையும் கணக் கிட பலதுறைத் தொழிற்கல்லூரி கள் விண்ணப்பதாரர்கள் நேர் காணல் மூலமாகவும் மற்ற நடவ டிக்கைகள் மூலமாகவும் மதிப்பிடப்படுவார்கள்.
"பலதுறைத் தொழிற்கல்லூரி யின் மாணவர் சேர்க்கையின் தொடர்பில் இப்போது வேலை அனுபவத்துக்கும் செயல்திறனுக் கும் அதிக முக்கியத்துவம் கொடுக்கப்பட்டாலும், மாணவர்கள் தாங்கள் தேர்ந்தெடுத்துள்ள ஏட் டுக் கல்வியின் தாக்கத்துக்கு ஈடு கொடுப்பதை நாங்கள் உறுதி செய் வோம்," என்று திரு ஓங், அங் மோ கியோவில் உள்ள தொழில் நுட்பக் கல்விக் கழகத் தலைமைய கத்தில் உரையாற்றும்போது தெரிவித்தார்.

