மருத்துவர் மருந்தகத்திலிருந்து வெளியேறிய பிறகு, நிர்வாக வேலைகளைச் செய்வதற்காக அங்கிருந்த தாதி ஒருவர் தன்னை மருத்துவர் என்று ஆள் மாறாட்டம் செய்து ஒரு பெண்ணை மானபங் கம் செய்த குற்றத்தை நேற்று ஒப்புக்கொண்டார். ஃபுல்லட்டன் ஹெல்த்கேர் குழுவின் ஒரு மருந்தகத்தில் தாதியாகப் பணிபுரிந்த 33 வயது முகம்மது ருசாய்னி ஜொஹாரி மருத்துவரை காண வந்த 28 வயது சீனப் பெண்மணியைப் பரிசோதிப்பதாகக் கூறி மானபங்கம் செய்தார்.
கடந்த ஆண்டு மே மாதம் 11ஆம் தேதி இரவு 8.40 மணிக்கு மருந்தகத்திற்குத் தலைவலி, காது மற்றும் தொண்டை வலி தொடர் பில் மருத்துவரைக் காண வந்த பெண்ணுடன் அவருடைய கண வரும் இருந்தார். பாதிக்கப்பட்ட பெண்ணின் பெயரை வெளியிட நீதிமன்றம் தடை உத்தரவு பிறப்பித்தது. அந்த நேரத்தில் மருந்தகத்தின் விளக்குகள் இன்னும் அணைக் கப்படாமல் இருந்ததால், அது திறந்துள்ளது என்று நினைத்து அந்தத் தம்பதிகள் மருந்தகத்துக் குள் சென்றனர். அவர்களிடம் மருத்துவர் வீட் டுக்குச் சென்ற செய்தியைக் கூறா மல் ருசாய்னி அப்பெண்ணை பரிசோதனை அறைக்கு அழை த்துச் சென்றார்.
ருசாய்னி மருத்துவரின் இருக் கையில் அமர்ந்தவாறு பெண்ணிடம் பேசினார். பின்னர் அவரைப் பரி சோதிப்பதாகக் கூறி மானபங்கம் செய்தார். 'ஸ்டெத்தஸ்கோப்' கருவியை யும் ரத்த அழுத்த பரிசோதனைக் கருவியையும் பயன்படுத்தி அந்த ஆடவர் பெண்ணைப் பரிசோதிப் பது போல் பாவனை செய்தார். பின்னர் கூடுதலாகப் பரி சோதிக்க வேண்டும் என்று கூறி பெண்ணை அங்குள்ள படுக் கையில் படுக்கச் சொன்னார்.

